எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காபூல் : ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே நேற்று துப்பாக்கிச்சூடு மற்றும் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தற்போது, அந்நாட்டில் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலீபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே நேற்று இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றுள்ளது. நேற்று மதியம் 2 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் மருத்துவமனை அருகே வெடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், தலீபான்களின் பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பின் ஹரொசன் பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


