எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்காலத்தை கலக்க தயாராகி வரும் டிஜிட்டல் ஆடைகள்
எதிர்காலத்தை கலக்க புதிய டிஜிட்டல் ஆடைகள் தயாராகி வருகின்றன. இன்றைய புதிய நூற்றாண்டின் யூத்களின் மனநிலைக்கு ஏற்ப எதிர்காலத்தில் மிகப் பெரிய பேஷன் சந்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் ஆடைகள் என்றால்... வாருங்கள் பார்க்கலாம்..
டிஜிட்டல் ஆடைகள் துணி அல்லது உறுதியான எதையும் கொண்டு செய்யப்படவில்லை. கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் மற்றும் 3டி மென்பொருளைப் பயன்படுத்தி ஜவுளிகளை விட பிக்சல்களில் இருந்து ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே நிஜ வாழ்க்கையில் நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை அணிய மாட்டீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் டிஜிட்டல் ஆடைகளை ஆன்லைனில் உலாவலாம் மற்றும் நீங்கள் விரும்பும் ஒன்றை ஆர்டர் செய்யலாம்.
நீங்கள் இதை வாங்க முடிவு செய்து விட்டால், அதை நேரில் பார்ப்பதற்கு பதிலாக டிஜிட்டல் வடிவில்தான் பார்க்க முடியும். இதை நீங்கள் நேரடியாக தொடவோ அணியவோ முடியாது. உங்கள் புகைப்படத்தில் தான் அணிய முடியும். இதற்காக பிரத்யேக டிஜிட்டல் ஆடை வடிவமைப்பாளர்கள் உள்ளனர். அவர்களிடம் ஆர்டர் செய்து டிஜிட்டல் முறையில் அவற்றை அணிந்து கொள்ளலாம்.
இதில் குறிப்பாக தற்போது ஃபேஷனாக பரவி வருவது என்னவென்றால் வழக்கமான மேல் சட்டை கால் சட்டை என்பதாகஅல்லாமல் பாரம்பரிய உடைகள், வித்தியாசமான உடைகள் என விதவிதமாக கலக்கலாம். இவற்றிற்கும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் தங்களை புதிய அவதார்களாக காட்டிக் கொள்ள விரும்பும் யூத்களுக்கும், நவீன டிஜிட்டல் பேஷன் விரும்பிகளுக்கும் இது மிகப் பெரிய சந்தையாக விரிவடைந்து வருகிறது. தொட்டுணரும் தன்மையிலிருந்து விலகி ஒரு புதிய உலகுக்கான கதவை இது திறந்து விட்டுள்ளது. தற்போது இதை அணியும் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதை அடிப்படையாக வைத்து தற்போது பேஸ்புக்கும் மெட்டாவெர்சன் என்ற புதிய அவதாரத்தை தொடங்கியுள்ளதாகவும் பேஷன் நிபுணர்கள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் புதிய பேஷன் சந்தைக்கான புதிய கதவு திறந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


