எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை வைப்பது தொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் கிடையாது. திமுகவினர் இந்த் படத்தை வைத்துள்ளனர் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. காலை இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் கறிவேப்பிலை சாதம் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அம்மா உணவகம் திமுக ஆட்சி அமைந்தும் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. சென்னையில் சிலர் அம்மா உணவகம் தாக்கப்பட்டு சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்திருந்தார்.
மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் 2015 மே 24 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. அம்மா உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன.
இந்நிலையில், இந்த உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவிக்கையில், அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை திமுக கட்சி பிரமுகர்கள் வைத்துள்ளார்கள். கருணாநிதி படத்தை வைப்பது தொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எங்களுக்கு தகவல் இல்லை. உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


