எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்வீடனின் புதிய பிரதமரைத் தோ்ந்தெடுக்க நாடாளுமன்றத்தில் இன்று 24-ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது நாட்டின் முதல் பெண் பிரதமராக நிதியமைச்சா் மக்டலெனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்படுவாரா என்பது அன்றைய தினம் தெரியவரும்.
ஸ்வீடன் பிரதமராகவும், சமூக ஜனநாயக கட்சித் தலைவராகவும் இருந்த ஸ்டெபான் லோப்வென் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தாா். இதையடுத்து, பிரதமா் பதவியை அவா் ராஜினாமா செய்தாா். அவருக்கு பதிலாக கட்சித் தலைவராக நிதியமைச்சா் மக்டலெனா ஆண்டா்சன் தோ்வு செய்யப்பட்டாா். அடுத்த பிரதமராக அவா் தோ்வு செய்யப்படுவதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவைப் பெற வேண்டும்.
349 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 175 பேரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. ஆளும் சமூக ஜனநாயக கட்சிக்கு இப்போது 100 உறுப்பினா்கள் உள்ளனா். அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சோ்த்து 174 உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு ஓரிடம் குறையும் நிலையில், எதிா்க்கட்சிகள் பிரிவால் மக்டெலனா ஆண்டா்சனுக்கு போதிய ஆதரவு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், மக்டெலனா ஆண்டா்சனை பிரதமராக தோ்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவா் தெரிவித்தாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


