முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகையின் கன்னம் போன்ற சாலைகள்: ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சை பேச்சு

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குடா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ -வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில்  மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மந்திரியான  பிறகு தனது தொகுதிக்கு முதல் முறையாக சென்ற ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் ​​கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் உரையாடினார். அப்போது அங்கு இருந்த மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தர கூறி கோரிக்கை விடுத்தனர்.  அதற்கு அவர் , அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி "எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் " என கேலியாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து