எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தன்னை ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த கடிதத்தில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சரவணன், கரூரில் உள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனை மற்றும் மகன் உள்ளனர். இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தான், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் மாணவர்கள் தன்னை தவறாக நினைப்பதாகவும், மாணவர்கள் முன் தனக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தன்னை ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த கடிதத்தில் சரவணன் குறிப்பிட்டுள்ளார். மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆசிரியர் சரவணனின் தற்கொலையும், அவரது உருக்கமான தற்கொலை கடிதமும் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


