Idhayam Matrimony

நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த நவம்பர் மாதத்தில் 40 சதவீதமாக குறைந்தது

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த நவம்பர் மாதத்தில் 40 சதவீதம் குறைந்ததாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நேற்று வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி இறுதியில் கொரோனா 2-ம் அலை பரவத் தொடங்கியது. மே மாதத்தில் பரவல் வேகம் உச்சம் தொட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் குறையத் தொடங்கியது. கடந்த 6 மாதமாக பாதிப்பு தொடர்ந்து குறைந்து தற்போது தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்து கட்டுக்குள் உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் (நவம்பர்) 3.10 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய மாதமான அக்டோபரில் 5.20 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இதன்மூலம் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா பாதிப்பு மேலும் 40 சதவீதம் குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. 

இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,723 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 96 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 177 பேர் உள்பட மேலும் 267 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்தபலி எண்ணிக்கை 4,69,247 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,40,997, கேரளாவில் 40,132 பேர் அடங்குவர். தொற்று பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 10,207 பேர் நலம்பெற்றுள்ளனர். இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 28 ஆயிரத்து 506 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 99,023 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 547 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 124 கோடியே 10 லட்சத்தை கடந்துள்ளது. இதில் ஒருநாளில் மட்டும் 80,98,716 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் 11,08,467 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 64.24 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து