எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. வருகிற 7-ம் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிகிறது. பின்னர் இந்திய அணி தென் ஆப்பிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்குகிறது. ஜனவரி 26-ந் தேதி வரை இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடுவதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் ஒரு பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா? என்பது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான கங்குலி பதில் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது., தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது. முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. டிசம்பர் 17-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது என்றார்.
___________
ஆஷஸ் டெஸ்ட் தொடர்:
ஆஸி. அணிக்கு புதிய கீப்பர்
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது.
இந்நிலையில் ஆஷஸ் தொடரில் முதல் இரு டெஸ்டுகளுக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி தேர்வாகியுள்ளார். 30 வயது அலெக்ஸ் கேரி, ஆஸ்திரேலிய அணிக்காக 45 ஒருநாள், 38 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸி. ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளில் ஆரோன் ஃபிஞ்சுக்குக் காயம் ஏற்பட்டபோது ஆஸி. அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார்.
_____________
சீனாவில் அனைத்து டென்னிஸ்
போட்டிகளும் ரத்து - டபிள்யூடிஏ
சீன ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகா் ஜாங் காவ்லி, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் கடந்த மாத தொடக்கத்தில் சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பதிவு நீக்கப்பட்டது. அதன் பிறகு பெங் ஷுவாய் வெளியுலகத் தொடா்பில் இல்லாத நிலையில் இருந்தார். அவரைத் தொடா்பு கொள்ள முடியாத நிலையும் இருந்தது. வெளியுலகம் கேள்வி எழுப்பியதை அடுத்து பெங் ஷுவாய் பாதுகாப்பாக இருப்பதாக சீன அரசு ஊடகம் பதில் தெரிவித்தாலும், அதைப் பல்வேறு தரப்பினரும் ஏற்கவில்லை.
35 வயது பெங் ஷுவாய், 2014-ல் இரட்டையர் தரவரிசையில் நெ.1 வீராங்கனையாகத் திகழ்ந்தவர். இந்த உயரத்தை அடைந்த முதல் சீன வீராங்கனை. இரட்டையர் பிரிவில் இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் ஹாங்காங் உள்பட சீனாவில் நடைபெறவிருந்த அனைத்து டபிள்யூடிஏ போட்டிகளையும் ரத்து செய்வதாக மகளிர் டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. டபிள்யூடிஏ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் சைமன், இந்த நடவடிக்கை குறித்து அளித்த விளக்கத்தில்., பெங் ஷுவாயால் சுதந்திரமாகப் பேச முடியாமல், பாலியல் குற்றச்சாட்டை மறுத்துக் கூறும்படியான அழுத்தம் உள்ள நிலையில் இதர வீராங்கனைகளை எப்படி சீனாவுக்கு அனுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
____________
ஐ.பி.எல்.லில் சம்பள உயர்வு
பெற்ற வெங்கடேஷ் ஐயர் !
ஐ.பி.எல் 2022 போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ. 8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டிருப்பதால் தற்போது தக்கவைக்கப்பட்ட வீரர்களில் அதிக மடங்கு சம்பள உயர்வு பெற்ற வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 2021 ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி தேர்வு செய்தது. இப்போது 40 மடங்கு சம்பள உயர்வு. இதற்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கேவின் ருதுராஜ். 30 மடங்கு சம்பள உயர்வுடன் ரூ. 6 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
____________
ஐ.பி.எல்.லில் ஒரே அணிக்காக
9 முறை தக்கவைக்கப்பட்ட வீரர்
ஐ.பி.எல் போட்டியில் பங்குபெறும் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லின் சம்பளம் முதல்முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்கு ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல் தேர்வானார். இம்முறை குறைந்த சம்பளத்துடன் ஆர்சிபி அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். 2012-ல் ஐ.பி.எல் போட்டியில் அறிமுகம் ஆனார் மேக்ஸ்வெல். டிராவிஸ் பர்ட்-டுக்குப் பதிலாக தில்லி அணியில் 20,000 அமெரிக்க டாலருக்குத் தேர்வானார். இந்த வருட ஏலத்தில் பெரிய தொகைக்கு ஆர்சிபி அணியில் தேர்வானார் மேக்ஸ்வெல். தன் மீது வைத்த நம்பிக்கைக்கு ஈடு கொடுக்கும் விதமாகச் சிறப்பாக விளையாடினார். 15 ஆட்டங்களில் 6 அரை சதங்களுடன் 513 ரன்கள் குவித்தார் மேக்ஸ்வெல். எகானமி - ரூ. 144.
இதனால் இந்த வருடம் மேக்ஸ்வெல்லைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது ஆர்சிபி அணி. ஆனால் இதன் காரணமாக மேக்ஸ்வெல்லின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. கோலிக்கு ரூ. 15 கோடி தரவேண்டியிருப்பதால் மேக்ஸ்வெல்லுக்கு ரூ. 11 கோடியும் சிராஜுக்கு ரூ. 7 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு முறையும் அதிகச் சம்பளம் பெற்று வந்தார் மேக்ஸ்வெல். அதிலும் கடந்த ஏலத்தில் ரூ. 14.25 கோடிக்குத் தேர்வாகி ஆச்சர்யப்படுத்தினார். இம்முறை ஆர்சிபி அணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக ரூ. 11 கோடி என குறைந்த சம்பளத்தில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார்.
___________
தென் ஆப்பிர்கா சுற்றுப்பயணம்:
இந்திய 'ஏ' அணி அபார ஆட்டம்
குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.
2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 2-வது நாளில் தென்னாப்பிரிக்க ஏ அணியை 297 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது இந்திய ஏ அணி. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார். இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 59 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.
______________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.