எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : எனது குரல் போல் பேசி தொலைபேசியில் மிமிக்கிரி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அருளாசியுடன் அ.தி.மு.க.வை வழிநடத்தி செல்லும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இவ்வியக்கத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகின்றனர். அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றோம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சில விஷமிகள் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் இன்னொரு நபருடன் நான் அலைபேசியில் பேசுவது போல் ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள குரல் என்னுடையது அல்ல. யாரோ விஷமத்தனமாக என்னுடைய குரல் போன்று மிமிக்கிரி செய்து பேசியுள்ளனர் .நான் சமீப காலமாக இரவு 10 மணிக்கு மேல் எனது அலைபேசியை பயன்படுத்துவதில்லை. ஆனால் அந்த ஆடியோ இரவு 1:30 மணிக்கு மேல் நான் பேசியது போல் வெளியாகியுள்ளது .அதில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் சித்தரிக்கப்பட்ட தாகும். என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலரின் நயவஞ்சக முயற்சியாக இது உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக போலியான லெட்டர் பேடில் தகவல் வெளியானது. இது போன்று தான் நான் பேசாத கருத்துக்கள் என் குரல் போன்று பேசி பதிவு செய்து பரப்பி வருகின்றனர். அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்.
ஆனால் இப்போது கழகத்தில் இரு ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள். எனவே தற்போதைய நிலையில் அ.தி.மு.க.வின் தலைமைக்கு புதிதாக ஒருவரை கொண்டு வரத் தேவையில்லை. தற்போது அந்த சூழ்நிலையும் எழவில்லை என்பது எனது கருத்தாகும் .எனவே என் குரலில் மிமிக்ரி செய்து அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் விஷமிகள் மீது கட்சியின் தலைமையிடம் உரிய அனுமதி பெற்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


