Idhayam Matrimony

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்

வியாழக்கிழமை, 9 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கெடுத்தார். அப்போது செய்தியாளர்கள், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துப் பேசும்போது, “10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தப்படும். இதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். பொதுத் தேர்வை ஏப்ரல் மாதம் நடத்துவதா அல்லது மே மாதம் நடத்துவதா என்று அப்போதுள்ள கொரோனா தொற்றுச் சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

 

பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்போதைக்கு மாணவர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்வது ஜனவரி, மார்ச் மாதம் நடைபெறும் திருப்புதல் தேர்வுக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து