எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.14 - தமிழகம் மற்றும் புதுவையில் 4 அடுக்கு பாதுகாப்புடன் தேர்தல் நேற்று (ஏப்.13) விறுவிறுப்புடனும், அமைதியாகவும் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நேற்று (புதன்கிழமை) ஒரே கட்டமாக நடந்தது. ஓட்டுப்பதிவுக்காக தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 54 ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகள் அமைத்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
ஓட்டுப்பதிவுக்காக 66 ஆயிரத்து 799 மின்னணு எந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன.அவற்றோடு 62 ஆயிரத்து 461 மைய கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதி செய்ய, அதிகாலை 6 மணிக்கு மாதிரி வாக்குப் பதிவு நடத்திப் பார்க்கப்பட்டது. காலை 8 மணிக்கு 234 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு தொடங்கியது. காலை முதலே ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. 4.71 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.க
ாலை 8 மணிக்குத்தான் ஓட்டுப்பதிவு தொடங்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த போதிலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே 7 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிகளுக்கு வரத் தொடங்கி விட்டனர். சில வாக்குச் சாவடிகளில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் 7.30 மணிக்கே வரிசையாக நின்று இருந்தனர். 8 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கிய சமயத்தில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்றதை காண முடிந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் உக்கிரம் அதிகமாகி விடும் என்ற காரணத்தால் முதியவர்கள் பலர் காலையிலேயே வந்து தங்கள் வாக்களிக்கும் கடமையை செய்து முடித்தனர். முதன் முதலாக வாக்களிக்கும் சுமார் 80 லட்சம் இளைஞர்களும் வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் வந்திருந்தனர்.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 9 மணிக்குள் அதாவது முதல் ஒரு மணி நேரத்துக்குள் 10 சதவீதம் பேர் தங்களது வாக்கை பதிவு செய்து விட்டது குறிப்பிடத்தக்கது. 11.30 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 25 முதல் 30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்ததை காண முடிந்தது. 11 மணி நிலவரப்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் சுமார் 32 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தது. மாற்றுத் திறனாளிகள் சாய்வுத் தாங்களை பயன்படுத்தி சிக்கலின்றி வாக்களித்தனர். அது போல பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையை பயன்படுத்தி எளிதாக ஓட்டு போட்டனர். வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அதிரடிப்படை மற்றும் மாநில காவல்துறை ஆகிய 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவில் எங்கும் சர்ச்சை ஏற்படவில்லை. ஓட்டுப்பதிவு மிக, மிக அமைதியாக நடந்தது குறிப்பிடத்தக்கது. சில வாக்குச் சாவடிகளில் மட்டும் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் பழுதாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்தகைய வாக்குச் சாவடிகளில் ஓரிரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப் பதிவு தொடங்கியது. மற்றபடி ஓட்டுப்பதிவில் எந்தவித சிறு சலசலப்பும் உண்டாகவில்லை.தேர்தல் அதிகாரிகள் சுமூகமான ஓட்டுப்பதிவை நடத்தி பாராட்டுதல்களை பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்களிலும் சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. 30 தொகுதிகளுக்கும் 851 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதிகாலையிலேயே பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் nullநீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர். நகர பகுதி மட்டுமின்றி, கிராமப்பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் 151 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் புதுவையில் மட்டும் 68 வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், கூடுதலாக போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்தல் பார்வையாளர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று சோதனையும் நடத்தினர். பறக்கும் படையினர் அந்தந்த பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறதா? வாக்காளர்களிடம் பிரசாரம் நடக்கிறதா? என தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 5 மணிக்கு பிறகு வந்த வாக்காளர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்கள் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பிறகு அந்த எந்திரங்கள் அனைத்தும் கார்களில் ஏற்றப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மொத்தத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக தேர்தல் அமைதியாக நடைபெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளின் ஓட்டுக்கள் 91 இடங்களில் எண்ணப்படும். சென்னையில் 16 தொகுதிகளின் வாக்குகள் 3 மையங்களில் எண்ணப்படும். மே 13ந்தி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை மின்னணு எந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: ஒரேமேடையில் பங்கேற்ற தே.ஜ. கூட்டணி தலைவர்கள்
23 Jan 2026செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நேற்ரு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரேமேடையில் பங்கேற்றனர்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jan 2026சென்னை, சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நானும், டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Jan 2026சென்னை, நானும் டி.டி.வி. தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி
23 Jan 2026சென்னை, தேர்தல் சீசனில் மட்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.
-
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மகாத்மா காந்தி பெயரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தொடர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்
23 Jan 2026சென்னை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் தொடர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –25-01-2026
24 Jan 2026 -
ஜெர்மனியில் பனிப்பொழிவால் சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
24 Jan 2026பெர்லின், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
துருக்கியில் நிலநடுக்கம்
24 Jan 2026அங்காரா, துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை: ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை
24 Jan 2026ஜார்ஜியா, சுமார் 15 கோடி அமெரிக்க மக்களை பனிப்புயல் தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
24 Jan 2026ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
-
துபாய் - சென்னை ஏர் இந்தியா விமான சேவை திடீர் நிறுத்தம்
24 Jan 2026சென்னை, 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்
24 Jan 2026நியூயார்க், அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வரும் 27ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.&
-
நாளை குடியரசு தின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
24 Jan 2026சென்னை, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் குறித்து மேயர் விளக்கம்
24 Jan 2026சென்னை, வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை.
-
அமெரிக்காவில் உறவினர்கள் மற்றும் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
24 Jan 2026ஜார்ஜியா, அமெரிக்காவில் மனைவி மற்றும் உறவினர்களை சுட்டுக்கொன்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலான்து பிரதமர் வலியுறுத்தல்
24 Jan 2026லண்டன், நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி
24 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 82 பேர் மாயமாகியுள்ளனர்.
-
தி.மு.க.வில் இணைகிறாரா..? அமைச்சர் சேகர்பாபு-ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
24 Jan 2026சென்னை, அமைச்சர் சேகர்பாபு - ஓ.பி.எஸ். சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேச்சு
24 Jan 2026சென்னை, தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
24 Jan 2026சென்னை, காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிப்பு
24 Jan 2026டெல்லி, 2026ம் ஆண்டுக்கான கலை, சமூகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
-
டெல்லியில் ரோஜ்கார் மேளா: 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்
24 Jan 2026புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நடந்த ரோஜ்கார் மேளாவில் 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
-
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
24 Jan 2026சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
நாளை குடியரசு தின விழா: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
24 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.
-
வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு ஐகோர்ட் தடை
24 Jan 2026மதுரை, வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்று பெற தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


