எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,நவ.- 11 - பாரதிய ஜனதா அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஜெகதீஷ் ஷெட்டிகர் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா தலைவராக இருக்கும் நிதீன்கட்காரி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதீன்கட்காரி, பல நிறுவனங்களுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் உரிமையாளராவார். இவர் மீது அரவிந்த் கெஜரிவால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் பல விவசாயிகளுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் இவருக்கு சொந்தமான புர்தி குரூப் நிறுவனத்தில் முறைகேடான வகையில் முதலீடு செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டை கெஜரிவால் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டையொட்டி பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நிதீன்கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஆர்.எஸ். எஸ். இயக்கம் தலையிட்டு நிதீன்கட்காரியை காப்பாற்றியது. இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள நிதீன்கட்காரி தலைவர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் ஷெட்டிகர் கூறியுள்ளார். நதீன்கட்காரியும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருக்கிறார். அதனால் அவர் முதலில் நாட்டின் நலனை காப்பதுதான் தர்மமாகும். கட்சியை காப்பாற்ற வேண்டியது அடுத்த கட்ட நடவடிக்கையாகும். அதனால் நாடு மற்றும் கட்சியை காப்பாற்ற நிதீன்கட்காரி உடனடியாக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஷெட்டிகர் வலியுறுத்தியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


