எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.14 - இந்த சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்சனையாக உள்ளது என்றும், நிலையான - மக்கள் நல அரசு அமைய வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து விபரம் வருமாறு:-
நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை 10.45 மணிக்கு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்கு சாவடிக்கு காரில் வந்தார். அந்த கல்லூரி வளாகத்தில் வேறு, வேறு இடங்களில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 167, 168, 169 ஆகிய எண் கொண்ட அந்த மூன்று வாக்குச்சாவடிகளும் பொது வாக்குச்சாவடிகளாகும். நடிகர் ரஜினி வாக்களிக்க வேண்டிய ஓட்டுச்சாவடி 169வது எண் ஓட்டுச்சாவடி யாகும். இது ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி போர்டிகோ பகுதியில் இருந்தது. ரஜினியின் காரும் மிகச்சரியாக அந்த வாக்குச்சாவடி அருகில் வந்து நின்றது. கருப்பு பேண்ட், ப்ளு கலர் சட்டை, கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்த ரஜினி அந்த ஓட்டுச்சாவடிக்குள் செல்ல முயன்றபோது திடீரென அவரை, அவருடன் வந்தவர்கள் வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர். கல்லூரிக்குள் நுழைந்து விட்ட ரஜினி அங்கு ஓட்டுச் சாவடி இல்லாததால் திரும்பினார். இதையடுத்து அவரை 167வது ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள், உங்கள் பெயர் 169வது வாக்குச்சாவடியில் உள்ளது. அது எதிர்புறம் உள்ளது. அங்கு செல்லுங்கள் என்றனர். இதையடுத்து ரஜினி அங்கிருந்து நடந்தே 169வது வாக்குச்சாவடிக்கு வந்தார். அலைக்கழிக்கப்பட்ட அவர் விறுவிறுவென உள்ளே சென்றார். ரஜினி ஓட்டுப்போடுவதை படம் பிடிக்க தொலைக் காட்சி, பத்திரிகை போட்டோ கிராபர்கள் நூற்றுக்கும் மேல் திரண்டிருந்தனர். இதனால் ரஜினி சற்று சிரமத்துக்குள்ளானார். மின்னல் வேகத்தில் வாக்களித்த அவர் அதே வேகத்தில் புறப்பட்டார். தேர்தல் தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, எந்த பதிலையும் அளிக்காமல், திரண்டிருந்த நிருபர்களை பார்த்து வணக்கம் கூறிவிட்டு, காரில் ஏறி சென்றுவிட்டார். பின்னர் வீட்டுக்குச் சென்ற அவர் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலில் விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சனைகள் முன்னிலை வகிக்கிறது. பொதுவாக நிலையான அரசும் மக்கள் நல அரசும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


