எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நீட் விலக்கு கோரி வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றினோம். அதன்பின்னர், இந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மாநில கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் கவர்னர் வைத்துள்ளார். மாநில உரிமையும், சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்விக்குறியானதால் தற்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் அவசியத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமது அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான். தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான். எனவே,வரைவுத் தீர்மானத்தின் மீது உங்களது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அ.தி.மு.க. துணை நிற்கும் என்றும், நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


