எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் விலக்கு மசோதாவுக்கு கவர்னர் தன்னுடைய ஒப்புதலை விரைவில் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையினை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டும் என்ற கருத்து உருவாகும் வகையில் கவர்னர், பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய தமிழ் நாட்டுப் பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும் எனவும் பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது சரியல்ல எனவும் தனது குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து அது ஊடகங்களிலும் பரவலாக வெளிவந்திருக்கின்றது.
தமிழகத்தின் மொழிப்போராட்ட வரலாறை அறிந்தோருக்குப் பிற இந்திய மொழிகள் என்பது இந்தியை முன்னிலைப் படுத்தும் சொற்பிரயோகம் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. தமிழ் நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான மொழிப்போராட்டம் என்பது நெடிய வரலாற்றை உள்ளடக்கியது.
தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்தான் அன்றைய தலைமை அமைச்சர் பண்டித நேரு, இந்தி பேசாத மா நிலங்கள் விரும்பாத வரை கட்டாயமாக இந்தியைத் திணிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தார். அதன் பின்னர் தமிழகத்தில் அண்ணா தலைமையில் தி.மு.க. 1967-ம் ஆண்டு அமைந்த போது தமிழ் நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெறும். இரு மொழிக் கொள்கையே கடைபிடிக்கப்படும் என அறிவித்து அன்று முதல் இன்று வரை இரு மொழிக் கொள்கையே தமிழ் நாட்டு அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருவதை நான் கவர்னரின் மேலான கவனத்திற்குச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
இரு மொழிக் கொள்கையால் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் அவர்களில் இடம் பெறும் வகையில் பெறும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை என்பதையும் கவர்னர் நன்கறிவார் என நான் நம்புகின்றேன்.
அதே போல, நீட் தேர்வின் காரணமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்.பி.பி.எஸ் தகுதிப் பட்டியலில் முதல் 1000 இடங்களில் சி.பி.எஸ்.சி. மாணவர்கள் 579 பேர், மாநில பாடத்திட்ட வாரியத்தில் பயின்ற 394 பேர் மற்றும் ஐ.சி.எஸ்.சி. போன்ற பிற பாடத்திட்டங்களில் படித்த 27 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்தப் பாகுபாட்டினைக் களையும் வண்ணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஓரளவு உதவக்கூடும். எனினும் அது ஒரு தற்காலிகத் தீர்வு தான் என்பதனையும் மாநிலப் பாடத்திட்ட வாரியம் மூலம் பயிலும் மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளியில் பயின்று தனியார் பயிற்சிப் பள்ளிகளில் ஏராளமான கட்டணம் செலுத்திப் படிக்க இயலாத மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சமூக நீதியின் அடிப்படிடையில் தங்களுக்கான இடங்களை 12-ம் வகுப்புபொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பெற வேண்டும் எனில் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு முழு விலக்கு அளிக்கப்படுவதே நிரந்தமான தீர்வாக அமையும் என்பதனையும் முதல்வர் தொடந்து வலியுறுத்தி வருகிறார்.
அதனடிப்படையில், தமிழ் நாடு சட்ட மன்றத்திலும் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப் பட்டு அது கவர்னரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றது. அந்த சட்ட முன் வடிவிற்குத் தன்னுடைய இசைவினையும் விரைவில் அளித்து ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களின் மருத்துவப் படிப்பு கனவுகளை நிறைவேற்ற தமிழ் நாடு முதலமைச்சரின் முன்னெடுப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கும் கவர்னர் துணை நிற்பார் எனவும் நான் நம்புகின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-12-2025.
29 Dec 2025 -
4-வது நாளாக தொடர்ந்த போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் கைது
29 Dec 2025சென்னை, சென்னையில் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜர்
29 Dec 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ . அலுவலகத்தில் த.வெ.க. துணை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூ ஆஜராகினர்.
-
வெல்லும் தமிழ் பெண்கள் கூடும் மேற்கு மண்டல மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
29 Dec 2025திருப்பூர், வெல்லும் தமிழ்ப் பெண்கள் கூடும் தி.மு.க. மகளிர் அணி மேற்கு மண்டல மாநாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
அன்புமணி புதிய கட்சி தொடங்கட்டும்: பா.ம.க.வின் செயல் தலைவர் பேச்சு
29 Dec 2025சேலம், அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சி தொடங்கட்டும் என்று ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்தார்.
-
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்..!
29 Dec 2025சேலம், சேலத்தில் நேற்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி பற்றி பேசியபோது ராமதாஸ் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
த.வெ.க. தலைவர் விஜய்யை முதல்வராக ஏற்று கொள்பவர்களுடன்தான் கூட்டணி : செங்கோட்டையன் திட்டவட்டம்
29 Dec 2025கோவை, த.வெ.க தலைவரை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ள த.வெ.க.
-
வார தொடக்கத்தில் தங்கம், வெள்ளி விலை சற்று சரிவு
29 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
3 மீனவர்கள் கைது எதிரொலி: மண்டபத்தில் மீனவர்கள் திடீர் போராட்டம்
29 Dec 2025ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகிறார்: 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
29 Dec 2025ராமேசுவரம், துணை ஜனாதிபதி இன்று ராமேசுவரம் வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் ஜனவரியில் கேரளா வருகிறார் பிரதமர் மோடி: பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கிறார்
29 Dec 2025திருவனந்தபுரம், வரும் ஜனவரி மாதம் கேரளா வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் 'மிஷன் 2026' திட்டத்தை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
29 Dec 2025டெல்லி, இந்திய பாதுகாப்புப்படைக்கு ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒப்ப
-
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம்
29 Dec 2025திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரளாக உற்சாக வரவேற்பு
29 Dec 2025கோவை, தி.மு.க. மகளிர் மாநாட்டுக்காக நேற்று கோவை வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் - ராமதாஸ்
29 Dec 2025சேலம், அன்புமணி என்னை தினமும் காயப்படுத்துகிறார் என்று ராமதாஸ் கூறினார்.
-
பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று பொருளாதார நிபுணர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி
29 Dec 2025புதுடெல்லி, பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்க இன்று புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்: உடனே கட்டுக்குள் கொண்டு வர அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
29 Dec 2025சென்னை, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: டெல்லியில் 128 விமானங்கள் ரத்து
29 Dec 2025டெல்லி, டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
-
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு
29 Dec 2025சபரிமலை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமரிமலையில் இன்று முதல் நடை திறக்கப்படுகிறது.
-
சென்னையில் சர்வதேச பாய்மரப் படகுப்போட்டி: முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை
29 Dec 2025சென்னை, சென்னையில் அடுத்த ஆண்டு இந்திய, சர்வதேச இளையோர் பாய்மரப் படகுப்போட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை கனிமொழி எம்.பி. திட்டவட்டம்
29 Dec 2025சென்னை, இண்டியா கூட்டணி உடையும் என்று நயினார் நாகேந்திரன் கனவு காண்கிறார் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை
-
ரஷ்யாவுடனான போரை நிறுத்துவது தொடா்பான 20 அம்ச ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
29 Dec 2025நியூயார்க், அமெரிக்கா வெளியிட்டுள்ள 20 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப்புடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன்
-
தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க. பக்கம்தான் உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
29 Dec 2025திருப்பூர், தமிழக மகளிர் என்றைக்கும் தி.மு.க.
-
உன்னாவ் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. செங்கருக்கான தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
29 Dec 2025புதுடெல்லி, செங்கரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி ஐகோர்ட் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க.
-
சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி அமைப்பேன்: டாக்டர் ராமதாஸ் பேச்சு
29 Dec 2025சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



