Idhayam Matrimony

ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களில் 65 சதவீத பேருக்கு ஒமைக்ரான் தொற்று இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் புதிய தகவல்

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களில் 65 சதவீத பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பேரிடருக்கு மத்தியில், ஒமைக்ரான் என்ற வார்த்தை மேலும் அச்சமூட்டி, தற்போது, அதன் தீவிரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஓரளவுக்கு நிம்மதியை அளித்தாலும் கூட, இன்னமும் அது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஒமைக்ரான் பாதிப்பு நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்கனவே கொரோனா பாதித்ததால் ஏற்பட்ட அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடையவில்லையா என்பது குறித்த ஆய்வுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 65 சதவீதத்தினர் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் என்பதுதான் அது. அதாவது, மூன்றில் ஒரு பகுதியினர் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள்.

இம்பெரியல் லண்டன் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒமைக்ரான் பாதித்தவர்கள் 3 பேரில் இரண்டு பேர் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருப்பது என்னவென்றால், ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட அதிக அபாயங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

அதேவேளையில், இரண்டாவது முறை பரிசோதனை செய்யும் போது உண்மையிலேயே அவர்களுக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டதா அல்லது, ஏற்கனவே பாதித்த கொரோனாவின் மிச்சங்கள், தற்போது செய்யப்படும் பிசிஆர் கருவிகள் மூலம் புதிய பாதிப்பாகக் காட்டப்படுகிறதா என்பதையும் ஒரு சோதனைக்குள்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து