முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

விமானத்தை போலவே பூமிக்கும் வந்து விட்டது கருப்பு பெட்டி

Image Unavailable

அண்மையில் நம்ம தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ேபாது, மீட்பு படையினர் முதலில் தேடியது கருப்பு பெட்டியைத்தான். விமானங்கள் விபத்துக்குள்ளானால் முதலில் தேடப்படுவது கருப்பு பெட்டியைத்தான். இந்த கருப்பு பெட்டி என்பது விமானம் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பாக அதனுள் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்து வைத்திருக்கும் பெட்டகம். இதன் மூலம் விபத்துக்கான காரணத்தை டக்கென்று கண்டுபிடித்து விடலாம். அதே போல பூமிக்கும் ஏதேனும் கருப்பு பெட்டி இருக்கா... என்று கேட்டால். இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஒரு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

பூமியின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பதிவு செய்யக்கூடிய டிசாஸ்டர் ரெக்கார்டர் என்ற ஒரு சாதனம் இந்த ஆண்டு நிறுவப்பட உள்ளது. பூமியின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படும் இத் திட்டம் நமது கிரகத்தின் அழிவுக்கான பாதையின் ஒவ்வொரு அடியையும் துல்லியமாக பதிவு செய்யும். சூரிய சக்தியால் இயங்கும் இந்த பெட்டகம் சராசரியாக ஒரு பள்ளிப் பேருந்தின் நீளம் இருக்கும்.

இது எந்தவகையான இயற்கை பேரிடரையும் தாங்கிக் கொண்டு பூமியின் மீது நடக்கும் அனைத்து தரவுகளை சேமிக்க வல்லது. இது 7.5 செமீ தடிமனான எஃகு தகடுகளை கொண்டு மூடப்பட்டிருக்கும். பூமியில் உள்ள மிகவும் பாதுகாப்பான இடத்தில் இப்பெட்டி வைக்கப்படும்.

இதில் வைக்கப்படும் ஹார்ட் டிரைவ்கள் காலநிலை தொடர்பான தகவல்களை பதிவுசெய்து சேமித்து வைக்கும். கிளெமெங்கர் பிபிடிஓ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனம் மற்றும் க்ளூ சொசைட்டி ஆகியவை சேர்ந்து இதை மேற்கொள்ள  இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago