எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
விஜய் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் படம் சாயம். இப்படத்தை இயக்கியும் படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பவர் ஆண்டனி சாமி. ஒயிட் லேம்ப் புரடக்ஷன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் ஷைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கதை – ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களான விஜய் விஷ்வாவும் ராசைய்யாவும் நெருங்கிய நண்பர்கள். ஒரு நாள் விஜய் விஷ்வாவின் முறைப்பெண்ணுடன் ராசைய்யா தனியாக பேசுவதை பார்த்து அவரைக் விஜய் விஷ்வா கண்டிக்கிறார். இதனால் இருவருக்கும் உருவான கை கலப்பில் எதிர்பாராமல் ராசைய்யா இறந்து போகிறார். இதனால் கொலை பழி விஜய் மீது விழுகிறது. இதன் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் அதிர்ச்சியுடன் பதில் அளிக்கிறது. விஜய் விஷ்வா முதல் பாதிவரை சக மாணவரைப் போலவும் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் மிரள வைக்கும் ரவுடியாகவும் மிரட்டியுள்ளார். இவரது பெற்றோராக வரும் பொன்வண்ணனும், சீதாவும் நடித்து அசத்தியுள்ளனர். நாகா உதயன் இசையில் பாடல்கள் இதமாக ஒலிக்கிறது. கிரிஸ்ட்டோபர், சலீம் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது. மொத்தத்தில் இந்த சாயம் படம் சமுதாயத்திற்கான விழிப்புணர்வுப் பாடம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


