எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், டிச. - 2 - அமெரிக்காவில் வசிக்கும் பார்வையற்ற இந்திய இளைஞருக்கு உயர் பதவி வழங்கி கவுரவித்துள்ளார் அதிபர் ஒபாமா. அந்த இளைஞர் பெயர் சச்சின் தேவ் பவித்ரன். இவர் உட்டா பல்கலைக்கழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான திட்ட இயக்குனராக தற்போது பணியாற்றி வருகின்றார். 2002 ம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளில் இவர் பணியாற்றியுள்ளார். உட்டா பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பி.எஸ்., எம்.ஸ்., என பல பட்டங்களை பெற்றுள்ள இவருக்கு 2007 ம் ஆண்டு அமெரிக்காவின் பார்வையிழந்தவர்களுக்கான தேசிய சம்மேளனம், கென்னத் ஜெர்னிகன் ஸ்காலர்ஷிப் உதவி வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பின் உயர் பதவியில் சச்சின் தேவ் பவித்ரனை நியமித்து அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளின் மூலம் அனுபவம் பெறுவார்கள். இந்த நிர்வாகத்தில் அவர்கள் பணியாற்றுவதை எண்ணி நான் பெருமைப்படுகின்றேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


