எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்று தேனி மாவட்டம் போடியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
இந்த பிரச்சாரத்தில் அவர் மேலும் பேசியதாவது,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 505 வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என தி.மு.க. தெரிவித்தது. ஆனால் தற்போது வரை பெரும்பாலான வாக்குறுதிகளை தி.மு.க.வால் நிறைவேற்ற முடியவில்லை. குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் எனது முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்காகதான் இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது வீட்டில் இருந்து கொண்டு கையெழுத்து போட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்துக்கு கூட வராமல் காணொளி மூலம் பிரசாரம் செய்கிறார். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வழிமுறை அவருக்கு தெரியவில்லை.
விவசாயிகளுக்கு 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக கூறி விட்டு 50 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நான் தொகுதிக்கு என்ன செய்தேன்? என்று அமைச்சர் இ.பெரியசாமி கேட்கிறார். நான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன். பொய்யான வாக்குறுதிகளை அளித்ததில் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். எப்போதும் அ.தி.மு.க. கொடுப்பவர்கள். தி.மு.க. மக்களிடம் இருப்பதை எடுப்பவர்கள். 10 மாத கால தி.மு.க. ஆட்சியில் ஒரு முன்னேற்றம் கூட தமிழகத்தில் ஏற்படவில்லை. யாருடைய ஆட்சிய நல்லாட்சி என்பதை மக்கள் எடைபோட்டு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


