Idhayam Matrimony

நாட்டிலேயே சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று பா.ஜ.க வேட்பாளர் சாதனை

வெள்ளிக்கிழமை, 11 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் சட்டமன்றத் தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

சஹிஹாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் சுனில் குமார் சர்மா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் அமர்பால் சர்மாவை 2 லட்சத்து 14ஆயிரத்து 292 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சாஹபாபத் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுபோல, பாஜக எம்எல்ஏவாக இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங், மீண்டும் தனது தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டில் 1.04 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில் தற்போது 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

இதற்குமுன் சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்ததே தேசிய அளவில் சாதனையாக இருந்தது. தற்போது சுனில்குமார் சர்மா அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து