எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இயற்கை வைத்தியம் செய்யத் தேவையான பொருள்கள்;
நாவல் மரப் பட்டை - 25 கிராம்.
வில்வ இலைகள் - 25 கிராம்.
சிறுகுறிஞ்சான் இலைகள் - 25 கிராம்.
நாவல் இலைகள் - 25 கிராம்.
பாவற்காய் இலைகள் - 25 கிராம்.
முருங்கை இலைகள் - 25 கிராம்.
ஆவாரம்பூ இலைகள் - 25 கிராம்.
வெள்ளை அருகம்புல் - 25 கிராம்.
பச்சை அருகம்புல் - 25 கிராம்.
ஆடு தின்னா பாலை இலைகள் - 25 கிராம்.
செய்முறை;--
மேற்கண்ட மூலிகை பொருள்களை 14 நாட்கள் நிழலில் காயவைத்து 15 வது நாள் 2 மணி நேரம் மட்டும் வெயிலில் காயவைத்து எடுத்து நன்கு சுத்தம் செய்து தனித்தனியாக இடித்து பொடி செய்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள பொடியை மருந்துக்கடையில் கிடைக்கும் கேப்சசூல்களில் அடைத்து வைத்துக்கொண்டு தேவையான அளவு சாப்பிட ரத்தத்தில் உள்ள கூடுதலாக சர்க்கரை அளவு படிப்படியாக குறையும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கடை பிடிக்க வேண்டிய 10 குறிப்புகள்;--
1 பழைய மருந்துடன் இந்த மருந்தையும் சில நாட்கள் சேர்த்து சாப்பிடலாம்,சர்க்கரை அளவு குறைய,குறைய,பழைய மருந்தை படிப்படியாக குறைக்கவும்.
2 பதட்டமான நேரத்தில் பரிசோதனை செய்தால் சர்க்கரை அளவு கூடுதலாகவே காட்டும் எனவே,பதட்டம் இல்லாமல் இருந்து சர்க்கரை அளவை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.
3 காலை 8.30,மதியம் 1.30,மற்றும் இரவு 8.00 என சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.
4 நார் சத்துகள் அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.
5 நாற்பது வயதுக்கு பின்னர் உணவின் அளவு குறைவாகவும்,காய்கறிகளின் அளவு அதிகமாகவும் உண்ண வேண்டும்.
6 சாப்பிடும் போது உணவை நன்கு மென்று தின்றால் 8 இட்லி சாப்பிட வேண்டிய இடத்தில் 2 இட்லி சாப்பிட்டாலே போதும்.
7 முளை கட்டிய பயறு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை அளவு குறையும்.
8 பூமிக்கு கீழ் விளையும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.
9 குடிநீரில் ஆவாரம்பூ மற்றும் வெந்தயம் போட்டு உற வைத்து அருந்தி வர சர்க்கரையின் அளவு குறையும், மேலும் ஆவாரம்பூவை பறித்து காயவைத்து இடித்து டீ போட்டு அருந்தலாம்.
10 நாவல் பழம் சாப்பிட பலன் கிடைக்கும்,நாவல்பழ விதைகளை பொடி செய்து சாப்பிடலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Feb 2026- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- இராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கைலாச வாகனம், அம்பாள் தங்க சிம்ம வாகனம்.
-
இன்றைய ராசிபலன்
10 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
10 Feb 2026


