Idhayam Matrimony

ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு : கலாச்சாரம், பாலின சமத்துவம் குறித்து ஆலோசனை

புதன்கிழமை, 4 மே 2022      உலகம்
Modi-1 2022 05 04

Source: provided

கொபென்ஹஜென் : ஐஸ்லாந்து பிரதமரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கலாச்சாரம், பாலின சமத்துவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று முன்தினம் பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான நேற்று பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். முன்னதாக டென்மார்க்கில் பிரதமர் மோடி பின்லாந்து பிரதமர் கத்தரீன் ஜக்கோப்ஸ்டோட்ரியை சந்தித்தார். டென்மார்க் தலைநகர் கொபென்ஹஜெனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, புவியின் உள்வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரிப்பதில் சிறந்து விளங்கும் ஐஸ்லாந்துடன் இந்தியா இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்கு பின் ஐஸ்லாந்து பிரதமர் கத்தரீன் ஜக்கோப்ஸ்டோட்ரி பேசுகையில், சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு, புவியின் உள்வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரித்தல், மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியா - ஐஸ்லாந்து பல்வேறு வாய்ப்புகளை கொண்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியும் நானும் கலாச்சாரம், பாலின சமத்துவம் குறித்து ஆலோசித்தோம்.  

இந்தியாவும் ஐஸ்லாந்தும் வெவ்வேறு நாடுகள். இந்தியாவே ஒரு துணைக்கண்டம். எங்கள் நாடு (ஐஸ்லாந்து) இயற்கையை பாதிக்காத வகையில் தனித்தன்மை பெற்றுள்ளது. பிரதமர் மோடியும் நானும் யோகா குறித்தும் பேசினோம். யோகா ஐஸ்லாந்தில் மிகவும் பிரபலம். நிறைய மக்கள் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து