எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சேலம் : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வரால் மேட்டூர் அணையிலிருந்து சென்ற ஆண்டு குறித்த நாளான ஜுன் 12-ம் நாளன்று குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்பட்டு குறுவை நெல் சாகுபடியில் புதிய சாதனை படைக்கப்பட்டது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து உள்ளது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 117.760 அடியாகவும், நீர் இருப்பு 89.942 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது. அதிக நீர்வரத்து தொடர்வதால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே. காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜுன் 12-க்கு முன்பாகவே, 24.5.2022(நேற்று) முதல் நீரைத் திறந்து விட தமிழக முதல்வர் உத்திரவிட்டிருந்தார்.
மேட்டூர் அணை கட்டப்பட்ட நாள் முதல் குறுவை சாகுபடிக்கு வழக்கமான தண்ணீர் திறக்கும் நாளான ஜுன் 12-ம் தேதிக்கு முன்னதாக முதல்முறையாக நேற்று மே 24-ல் குறுவை பாசனத்திற்காக முதல்வர் ஸ்டாலினால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் மே மாதத்தில் மிக முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும். சுதந்திர இந்தியாவில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திறந்து விடப்படுவது இதுவே இரண்டாவது முறையாகும்.
முன்கூட்டியே திறப்பதால் ஏற்படும் நன்மைகள்
மேட்டூர் அணையிலிருந்து மிக முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்து விடப்படும் தண்ணீரானது முழுமையாக டெல்டா பாசன பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைய ஏதுவாகும். மேட்டூர் அணையிலிருந்து முன்னதாக திறந்து விடப்படும் தண்ணீரைக் கொண்டு டெல்டா பாசனப் பகுதிகளில் வழக்கத்தை விட குறுவை சாகுபடிக்காக சுமார் 5.22 லட்சம் ஏக்கர் பயிரிட்டு அறுவடை செய்ய எதிர்பார்க்கப்படும். எதிர்வரும் சம்பா சாகுபடி பணிகளை முன்னதாக தொடங்கி செயல்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
டெல்டா பாசன பகுதிகளில் தூர்வாரும் பணிகள் முன்னதாகவே ஆரம்பிக்கப்பட்டதால் முன்னதாகவே முடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் நெல்மட்டுமல்லாமல் கோடை பயிரான பயறு மற்றும் தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை 5,22,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டி.எம்.சி. வழங்கியும், மீதமுள்ள 25.26 டி.எம்.சி. தண்ணீர் ஆனது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும்
குறுவை பாசனத்திற்கு நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 93.860 டி.எம்.சி. தண்ணீரும், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு 30,800 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 5.88 டி.எம்.சி. தண்ணீரும் மேட்டூர் அணையிலிருந்து தேவைப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு நேற்று (24.5.2022) காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, நேற்றைய தினம் மாலைக்குள் படிப்படியாக 10,000 கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜுன் மாதம் இறுதி வரை வழங்கப்படும். ஜுலை மாதத்தில் 10,000 கன அடியிலிருந்து படிப்படியாக 16,000 கன அடியாக உயர்த்தியும், ஆகஸ்ட் மாதத்தில் 18,000 கன அடியாகவும் நீர் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
சம்பா மற்றும் தாளடி பாசனம்
மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு, செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 12,10,000 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையிலிருந்து 108.50 டி.எம்சி. தண்ணீர் வழங்கியும் மீதமுள்ள 97.10 டி.எம்.சி. தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.
மேட்டூர் அணையின் கீழ்காவிரி ஆற்றில் இருந்து சுமார் 155 குடிநீர் திட்டங்களின் மூலம் தினசரி 1700-க்கும் மேற்பட்ட மில்லியன் லிட்டர் தண்ணீர் 18 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆண்டு முழுவதும் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும் தண்ணீர் திறந்து விடப்படும் பொழுது அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும் மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 7 X 30 மெகாவாட், என மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழையினை பொருத்து அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் தேவைக்கேற்ப வழங்கப்படும். நடப்பாண்டில் காவிரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறை வைத்துப் பயன்படுத்த நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறும், மிக அதிக அளவு மகசூல் பெற்று பயனடையுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, சேலம் மாவட்ட கலெக்டர் செ.கார்மேகம், நீர்வளத்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.