Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலைகளை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும்: அண்ணாமலை

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Annamalai 2022 05 06

Source: provided

சென்னை : தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க. அரசு குறைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

மக்களின் சுமைகளை குறைப்பதற்காக மத்திய அரசு தற்போது எரி பொருட்களின் மீதான வரியை 2-வது முறையாக குறைத்துள்ளது. இதன் மூலம் முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது.  மத்திய அரசின் எரிபொருளின் மீதான கலால் வரியை விட அதிகமாக மாநிலம் கூடுதலாக வரியை வசூலிக்கும் போது வருவாய் இழப்பு எப்படி ஏற்படும்.

கடந்த தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதியை மறந்து விட்டு, பெட்ரோல் மீது 5 ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ரூபாய் குறைத்து விட்டு டீசலுக்கு வாக்களித்தபடி 4 ரூபாயில் ஒரு பைசா கூட குறைக்காமல் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டது. தமிழகம் தவிர்த்த இந்தியாவின் பிற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை அடுத்து மாநில அரசும் விலையை குறைத்து மக்கள் நலனில் அக்கறை காட்டியது.

முதல் முறையாக, தமிழக அரசின் மதிப்புக் கூட்டு வரி மத்திய அரசின் கலால் வரியை விட அதிகமாக இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுடன் பகிரும், அடிப்படைக் கலால் வரியில் எந்த மாறுதலும் செய்யவில்லை . அதைத்தான் மாநில அரசுடன் பகிர்ந்து வருகிறது. ஆனால் கூடுதல் கலால் வரி விவசாய கட்டமைப்புக்கும், மற்றும் சாலை மேம்பாட்டுக்குமான வரித் தொகுப்புகள் திட்ட ஒதுக்கீடு நிதியாகக் கருதப்படுவதால், அதை மாநிலங்களின் திட்டங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆகவே மாநிலங்களுடன் நேரடியாகப் பகிராத திட்ட ஒதுக்கீடு வரியில் மத்திய அரசு வரிக்குறைப்பு செய்துள்ளது.

தி.மு.க. அரசு உடனடியாக பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும் குறைப்பதன் மூலம் தன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்பட வேண்டும். மே 2020-ல் நிறைவேற்றப்பட்ட அரசாணையை மாற்றியமைத்து, மாநில மதிப்புக் கூட்டு வரியை அடிப்படை விலையின் சதவீதமாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து