எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆத்தூர் : மாநில வரியை மத்திய அரசு சுரண்டி விட்டது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சேலத்தை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். சேலம் மாவட்டம் சாதாரண மாவட்டம் அல்ல, வீரபாண்டியார் மாவட்டம். இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. திராவிட மாடல் யாரையும் பிரிக்காது, ஒன்றுசேர்க்கும் ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி இருக்கும். திமுக ஒரு கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசு என்பதை உணர வேண்டும்.
திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது, அரவணைக்கும். திமுக கொடுத்த வாக்குகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்கமாட்டேன். தமிழக மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் என மக்கள் மத்தியில் உறுதி அளிக்கிறேன். பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கண்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளனர்.
மாநில வரியை மத்திய அரசு சுரண்டிவிட்டது. இல்லாததை கட்டவிழ்த்துவிட்டு பார்க்கும் பலரால் இருப்பதை கண் திறந்து பார்க்க முடியவில்லை. எத்தனை விஷத்தன்மை வாய்ந்த பிரசாரங்களை செய்தாலும் திமுகவை ஒருபோதும் மக்கள் மனதிலிருந்து வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


