எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், ஜன. 16 - இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 3,550 லாபம் ்ஈட்டியுள்ளது டி.சி.எஸ். நிறுவனம்.
நாட்டின் மாபெரும் சாப்ட்வேர் நிறுவனமான டி.சி.எஸ். சந்தையில் நிலவிய யூகங்களை எலலாம் கடந்து அதிக லாபத்தை ்ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அதன் லாபம் 26.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் 21.7 சதவீதம் அதிகரித்து ரூ. 16,070 கோடியை எட்டியுள்ளது. இதில் லாபமாக ரூ. 3,550 கோடியை ்ஈட்டியுள்ளது டி.சி.எஸ்.
இந்த நிறுவனத்திலிருந்து பதவி விலகுவோர் எண்ணிக்கையும் 10 சதவீதத்துக்கும் குறைவாக குறைந்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு ரூ. 500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஆர்டர்களை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் 14 ல் இருந்து 16 ஆக உயர்ந்துள்ளது. இதன் மொத்த கிளையன்டுகளின் எண்ணிக்கை 1,051 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 1,001 ஆக இருந்தது.
இந்த நிலையில் டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான என். சந்திரசேகரன் அளித்துள்ள பேட்டியில், 2013 நிதியாண்டில் திட்டமிட்டபடி 60,000 ஊழியர்களை சேர்க்க டி.சி.எஸ். திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை புதிதாக 49,600 பேர் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனமும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக லாபம் ்ஈட்டியுள்ளது நினைவுகூறத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


