Idhayam Matrimony

ஆதீன விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவது தவறான போக்கு: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

வியாழக்கிழமை, 9 ஜூன் 2022      அரசியல்
EPS-2022-04-14

ஆதீன விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவது தவறான போக்கு என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சேலம் மாவட்டம் ஒமலூரில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

ஆன்லைன் சூதாட்டத்தில் கலந்து கொண்ட பலர், தங்களது சொத்துக்களை இழந்து, விலைமதிக்க முடியாத உயிரைவும் இழந்து கொண்டிருக்கின்றனர். எனவே, ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டத்தை இயற்றி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாடத்தை தடை செய்ய வேண்டும்.   

எந்த மதமாக இருந்தாலும், எந்த திருக்கோயில்களாக இருந்தாலும், அந்தந்த ஐதீகத்தின்படி வழிபாடு நடைபெற வேண்டும், அதுதான் முறை. அதுதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, ஏதேதோ தவறான வழிகளில், யாருடைய பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர். இது ஒரு தவறான போக்கு என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து