Idhayam Matrimony

போர் மூளும் அபாயம் ? தைவான் கடற்பரப்பில் ஏவுகணைகளை வீசிய சீனா

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      உலகம்
china2022 08 04

Source: provided

தைபே: சீனா தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1940 களில் நடந்த உள்நாட்டுப் போரின் போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டன. அப்போதிருந்து, தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடடாக அழைத்து வருகிறது. அதேசமயம், சீனா அதை தனது மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என கூறி வருகிறது. அதாவது தைவான் மீது சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது.

சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளன. பெரும்பாலான நாடுகள் தைவானை சீனாவின் ஒரு பகுதியாகவே கருதுகின்றன. தைவானுடன் அமெரிக்கா அதிகாரபூர்வ இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தைவான் உறவுச் சட்டத்தின் கீழ் அமெரிக்கா அதற்கு ஆயுதங்களை விற்கிறது. தைவானின் தற்காப்புக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 2021 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீனா தைவானைத் தாக்கினால், தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று கூறினார். சீனாவின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு வந்து சென்றார். பெலோசியின் வருகையால் திகைத்துப் போன சீனா, தற்போது தைவான் மீது தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தைவானைச் சுற்றிலும் சீன ராணுவம் ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரான டொனால்ட் ரோத்வெல், நான்சி பெலோசியின் தைவான் பயணம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு ஒரு சவாலாக மாறி உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு வருவார். அத்தகைய சூழ்நிலையில், பெலோசியின் வருகை ஜின்பிங் மதிப்பை குறைப்பதாக அமையும் எனவே அவர் இந்த நடவடிக்கைக்கு வலுவான பதிலைக் கொடுக்க வேண்டும் என எண்ணி உள்ளதாக கூறி உள்ளார்.

பெலோசி வெளியேறியவுடன், சீனா தைவானின் கடல் மற்றும் வான்வெளியில் வடக்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் இராணுவப் பயிற்சிகளை அறிவித்தது. உண்மையான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் இந்த வாரம் முழுவதும் இந்தப் பயிற்சி நடைபெறும் என்று சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது.

சீனா போன்ற மாபெரும் சக்தியை சமாளிக்க சமச்சீரற்ற போர் முறையை தைவான் ஏற்றுக்கொண்டது. இது பார்குபின் உத்தி என்றும் அழைக்கப்படுகிறது. எதிரிக்கு முடிந்தவரை கடினமான மற்றும் விலையுயர்ந்த தாக்குதலை உருவாக்குவதே இதன் நோக்கம்.

தைவான் விமான எதிர்ப்பு, பீரங்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கி குவித்துள்ளது. இதில் டிரோன்கள் மற்றும் மொபைல் கடலோர பாதுகாப்பு கப்பல் ஏவுகணை (சிடிசிஎம்) போன்ற குறைந்த விலை போர்க்கப்பல்களும் அடங்கும். சீனாவின் விலையுயர்ந்த கடற்படை கப்பல்கள் மற்றும் கடற்படை உபகரணங்களை அழிக்கும் திறன் அவைகளுக்கு உள்ளது.

தைவான் அனைத்து பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. தைவானைக் கைப்பற்றுவதற்கு, சீனா அதிக எண்ணிக்கையிலான படைகள் , கவச வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் எரிபொருளைக் கொண்டு செல்ல வேண்டும். இது கடல் வழியாக மட்டுமே சாத்தியமாகும்.பல அடுக்கு கடல் பாதுகாப்பை மீறி சீன வீரர்கள் தைவானை அடைந்தாலும் தைவான் கொரில்லா போருக்கு தனது நகரங்களை தயார் செய்துள்ளது.35 லட்சம் தைவானியர்கள் கொரில்லா போரில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர்.

இந்தநிலையில் சீனா நேற்று தைவானின் கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. சீனா தைவானின் வட-கிழக்கு கடற்கரையில் அருகிலுள்ள இராணுவ முகாமில் இருந்து இரண்டு டாங்பெங் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து