எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சியோல் : அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி உலக நாடுகளின் அமைதியை அழிப்பவர் என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய பயணம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற நான்சி பெலோசி அந்த பயணத்தை முடித்துக் கொண்டு தென்கொரியா சென்றார். அங்கு, தென் கொரியா, வடகொரியாவை பிரிக்கும் கொரிய தீபகற்பத்தின் எல்லைக்கு அவர் சென்றார்.
இருநாட்டு எல்லைப்பகுதிக்கு நான்சி சென்றதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரிய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், நான்சி பெலோசி உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மிக மோசமாக அழிப்பவர். தென்கொரியாவில் நான்சியின் நடவடிக்கைகள் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வடகொரியா எதிர்ப்பு கொள்கையை கொண்டுள்ளதை காட்டுகிறது என கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


