முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் காந்தியின் திருவுருவ சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : தமிழக அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையினை இன்று காலை 10.30 மணியளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 

இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட தேசத் தந்தை, மகாத்மா என்று போற்றப்படும் அண்ணல் காந்தியடிகள் குஜராத் மாநிலம், போர்பந்தர் என்னும் ஊரில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி –  புத்லிபாய் தம்பதியருக்கு 02.10.1869 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது மனைவி கஸ்தூரிபாய் ஆவார். நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட உத்தமர் காந்தியடிகள் 30.01.1948 அன்று அகால மரணத்தைத் தழுவினார். 

இந்த நிலையில் 1949-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அண்ணல் காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டு அதன் நினைவாக அமைக்கப்பட்ட காந்தி மண்டபம் 30.05.1956 அன்று திறந்து வைக்கப்பட்டது.  அண்ணலுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், தமிழக அரசின் சார்பில், சென்னையில் காந்தி மண்டப வளாகம் 27.01.1956 அன்றும், இவ்வளாகத்தில் அண்ணல் காந்தியடிகளின் அருங்காட்சியகமும் 02.10.1979 அன்றும் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து