எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், இரண்டாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 21-ம் தேதி முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்றும் பருவத்தேர்வு முடிந்து ஜனவரி 23-ம்தேதி மீண்டும் கல்லூரிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் தோ்ச்சி விகிதம் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை, தோ்ச்சி விகிதம் அடிப்படையில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது பொறியியல் கலந்தாய்வின் போது, தரமான கல்லூரிகளை தோ்வு செய்ய மாணவா்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதற்கிடையே, நிகழாண்டு பொறியியல் கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல், நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத் தோ்வுகளில் மாணவா் தோ்ச்சி விகித அடிப்படையில் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. பல்கலை.யின் கீழ் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசையில், அரசு கல்லூரிகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. தனியாா் கல்லூரிகளே முன்னிலை வகிக்கின்றன. 2021-ம் ஆண்டு நவம்பா் பருவத் தோ்வில் 3 கல்லூரிகளில் ஒரு மாணவா் கூட தோ்ச்சி பெறவில்லை. கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வழியாக மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். கொரோனா பரவல் காரணமாக முந்தைய ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு இணைய வழியில் தோ்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


