Idhayam Matrimony

ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      தமிழகம்
erode----------2022-08-18

Source: provided

ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு சூரம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாய் சுமையா என்கின்ற இந்திராணி , சிறுமியின் வளர்ப்பு தந்தை சையத் அலி, இடைத்தரகர்ளாக செயல்பட்ட மாலதி மற்றும் ஆதார் அட்டையைத் திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே, தமிழக அரசு சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அடிப்படையில், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனிடையே கருமுட்டை விவகாரத்தில் நான்கு பேரையும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு எஸ்பி சசிமோகன் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் நால்வரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உத்தரவிட்டார். தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து