எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உடல் பருமனை குறைப்பது எப்படி?
பரம்பரையாக வரும் உடல் பருமன் மற்றும் அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமன் என இரு வகை உடல் பருமன் உள்ளது.
அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை குறைப்பது எளிது ஆனால், பரம்பரையாக வரும் உடல் பருமனை குறைப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
உடல் பருமனை பயிற்சி மூலமாகவும்,உணவு கட்டுப்பாடு மூலமாகவும்,உள்முக மருந்துகள் உட்கொண்டும் குறைக்க முடியும்.
நம் உட்கொள்ளும் உணவில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.
அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை உணவுகளை குறைத்து உண்பதாலும் மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதாலும் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.
பரம்பரையாக வரும் உடல் பருமனை குறைப்பதற்கு உணவுகளை குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன் நடை பயிற்சி மற்றும் மெல்லோட்ட பயிற்சி களையும் சேர்த்து செய்தால் நல்ல பலன் தரும்,விரைவில் எடை குறையவும் வாய்ப்புள்ளது.
உணவு கட்டுப்பாட்டுடன் மனக்கட்டுப்பாடும் இருந்தால் நொறுக்குத் தீனியை தவிர்த்து அதன் மூலம் உடல் எடை குறையும்.
தைராய்டு மற்றும் வேறு நோய்கள் காரணமாகவும் உடல் பருமன் வரும்,மற்றும் பள்ளி ,கல்லூரி செல்லும் இள வயது உள்ளவர்களுக்கும் குறைந்த நாட்களில் அதிக எடை கூடும்,
உடல் எடை கூடுவதால் மேலும் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது, எனவே மிக கவனமாக இருந்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
சித்த வைத்திய முறையில் மிக எளிமையான மருந்து உள்ளது.
100 மில்லி நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை தோலுடன் வெட்டி போடவும்,உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து போட்டு 50 மில்லி வரும்வரை நன்கு கொதிக்க வைத்து 21 நாட்கள் முதல் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை நன்கு குறையும்.
இதனுடன் உணவுகளை குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன் நடை பயிற்சி ,மெல்லோட்ட பயிற்சி மற்றும் யோகாசன பயிற்சி களையும் சேர்த்து செய்தால் நல்ல பலன் தரும்.
கொள்ளு உடல் எடை குறைக்க நல்ல மருந்தாக உள்ளது,இதை இரவில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வர நல்ல பலன் தரும்.
வயிறு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்பு மெதுவாகத்தான் கரையும்,எனவே தொடர் முயற்சி தேவை.
நின்று கொண்டு கைகளை உயர்த்தி பின் குனிந்து கால் கட்டை விரலை தொடும் பயிற்சி மூலமாக வயிற்று பகுதி கொழுப்பு குறையும்,இதை அமர்ந்து கொண்டும் செய்யலாம்,நல்ல பலன் தரும்.
பெண்களுக்கு கர்பப்பை பிரச்சனை இருந்தாலும் ,கர்பப்பையில் நீர் கட்டிகள் இருந்தாலும் உடல் எடை கூடும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஓய்வடுக்க தவறினாலும் உடல் எடை கூடும்.
சரியான நேரத்தில் சரியான அளவு உண்ணாமல் இருந்தாலும்,அடுத்த வேளை அதிகமான அளவு உணவை எடுத்துக்கொள்வதாலும் உடல் எடை மிக எளிதாக கூடிவிடுகிறது.
நெடுநேரம் இரவில் கண் விழிப்பது அந்த நேரம் அதிகமாக உண்பது உடல் எடையை கூட்டும்.
அசைவ உணவுகளை உண்டு, பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
முறையற்ற உணவு,முறையற்ற பழக்க வழக்கங்கள் முறையற்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடு,உடற்பயிற்சி, மற்றும் ஆழ்ந்த உறக்கம் உடல் எடையை குறைக்க உதவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


