Idhayam Matrimony

ஸ்பெயின் சுற்றுலா பயணிகள் 7 பேர் பாலியல் பலாத்காரம்

புதன்கிழமை, 6 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

மெக்ஸிகோ, பிப்.7 - மெக்ஸிகோ நாட்டில், ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிகள் 7 பேரை  ஒருவர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மெக்ஸிகோ நகரிலுள்ள அகபுல்கோ என்ற இடத்தில் இச்சம்வம் நடந்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மெக்ஸிகோ நகரின் பிரபலமான புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான   அகபுல்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள பிளயாபோன்பில்  என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பங்களாவில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகளை ஆயுதங்களுடன்

வந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த பகுதிக்கு அதிகாரிகள் விரைந்து சென்று, துப்பாக்கியுடன் வந்த அவனை பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

 ஸ்பெயின்  நாட்டு தூதுவர்களும், பிற அதிகாரிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்ஸிகோ நாட்டில், குரேரா மாநிலத்தில உள்ள அகபுல்கோவில் ஸ்பெயின் நாட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்  என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபகாலமாக, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அகபுல்கோவில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போதிய பாதுதாப்பு அளிக்க 2011-ல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு தீவிரமாக்கியது. இந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களைத் தடுக்கவே இந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago