Idhayam Matrimony

உ.பி.யில் ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2022      இந்தியா
Uttar-Pradesh 2022-08-28

Source: provided

லக்னோ " உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் 20 பேரை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஒன்று கர்ரா ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

விபத்து குறித்து, ஹர்டோய் மாவட்ட மாஜிஸ்திரேட் அவினாஷ் குமார் கூறுகையில்,  டிராக்டர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர் முகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிராக்டரின் சக்கரம் கழன்றியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் டிராக்டருடன் கர்ரா ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் 14 பேர் உயிர் பிழைத்துள்ளனர். உயிரிழந்த முகேஷின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஐந்து பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்பு குழு மற்றும் மாகாண ஆயுதப்படை வெள்ளப் பிரிவு குழுக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அனைவரும் மீட்கப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து