Idhayam Matrimony

தங்கம் உற்பத்தியில் சீனா முதலிடம்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், பிப். 9 - உலக அளவில் தங்க உற்பத்தியில் சீனா 6 வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிய சீனா, தங்க உற்பத்தியில் உலக அளவில் முதலிடத்தை பிடித்தது. உலகில் தங்க நுகர்வோர் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. அடுத்த இடத்தில் உள்ள சீனாவில் 761.05 டன் தங்கம் விற்பனையாகிறது. 2012 ம் ஆண்டு தங்க உற்பத்தி 403.05 டன் என்ற உச்ச அளவை சீனா எட்டியது. 

அதற்கு முந்தைய ஆண்டில் சீனாவின் தங்க உற்பத்தி 11.66 சதவீதம் அதிகரித்தது. 1949 ம் ஆண்டு சீனாவின் தங்க உற்பத்தி வெறும் 4.07 டன்னாக மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டின் தங்க உற்பத்தியில் ஷண்டாங், கனஸ், ஜியான்சி உள்ளிட்ட 10 முக்கிய மாவட்டங்கள் அளித்த பங்களிப்பு மட்டும் மொத்த உற்பத்தி அளவில் 82.71 சதவீதமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago