எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவனந்தபுரம் : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரண்டாவது முறையாக ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் நேற்று காலை கேரள மாநிலம், பெரும்பாரா சந்திப்பில் இருந்து தனது 16-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டார்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் பாரத் ஜோடோ நடைபயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைபயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைபயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பெரும்பாரா சந்திப்பு பகுதியிலிருந்து நேற்று காலை 6.30 மணியளவில் நடைபயணத்தை தொடர்ந்தார். ராகுல் காந்தி நடை பயணம் தோபே ஸ்டேடியம் சென்றடைந்ததும் அங்கு கூடியிருந்த கட்சியனர் மற்றும் பொதுமக்களை சந்தித்துப் பேசினார். கேரளம் மாநிலத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கிய ராகுல் நடை பயணம் வரும் 29-ம் தேதி முடிவடைகிறது.
மொத்தம் 150 நாள்கள் நடைபெறும் நடைபயணம் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபெறுகிறது. இதில் 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


