எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், பிப். 18 - அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான ஆசிரியைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதுகளை ஆசிரியைகளின் குடும்பத்தாரிடம் அதிபர் ஒபாமா வழங்கினார்.
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள சாண்டி ஹுக் மழலையர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 14 ம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள், 6 ஆசிரியைகள் உள்பட 26 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 ஆசிரியைகளின் பெயர்கள் அமெரிக்காவின் 2 வது உயரிய விருதான ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பலியான ஆசிரியைகளின் குடும்பத்தாரிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இவ்விருதுகளை வழங்கினார். இவ்விழாவில் ஒபாமா, பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் பலியான ஆசிரியைகள் நினைத்திருந்தால், தங்களது உயிரை தற்காத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், அவர்கள் தன்னலத்தை பெரிதாக கருதவில்லை. தங்களது பாதுகாப்பில் இருந்த குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிர்களை அவர்கள் இழந்தனர் என்று ஒபாமா கூறினார். உலக நாடுகளை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்டங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


