முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் பேரத்தில் தொடர்பில்லை: சஞ்சீவ் தியாகி

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 18 - 2010 ம் ஆண்டு நடந்த பாதுகாப்பு அமைச்சக ஹெலிகாப்ட்டர் பேரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகியின் சகோதரரும், இத்தாலிய விசாரணை அதிகாரிகளால் இந்த பேரத்தில் முக்கிய தொடர்பாளராக கூறப்பட்டுள்ள சஞ்சீவ் ஜூலி தியாகி தெரிவித்துள்ளார்.  வி.வி.ஐ.பி. களுக்காக ரூ. 3600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 362 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டது சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகியின் சகோதர் சஞ்சீவ் ஜூலி தியாகி என்பவர் முக்கிய சந்தேகத்துக்கிடமானவர்களில் ஒருவராக இத்தாலிய கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. 

இந்த புகார் குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு சஞ்சீவ் ஜூலி தியாகி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

வியாபாரத்தில் தொடர்பு உண்டு, பேரத்தில் தொடர்பு இல்லை. மொத்த கதையும் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்தின் இடைத்தரகர் கூடோ ஹஸ்கியால் புனையப்பட்டது என்று கூறினார். எஸ்.பி. தியாகி பதவியில் இருந்த காலத்தில் ஒரு போதும் என்அலுவலகத்துக்கு வரவில்லை. இது சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்து விசாரணைக்கு தயாராக இருக்கிறேன். 

இந்த விவகாரத்தில் நான் தினசரி புகார்கள் என்ற பெயரால் கற்பழிக்கப்படுகிறேன். டிபின் மெக்கானிக்காவின் துணை நிறுவனங்களான அன்சால்டோ எனர்ஜியா மற்றும் அன்சால்டோஎஸ்.டி.எஸ்.ஆகியவற்றுடன் எனக்கு தொடர்பு இருந்தது உண்மைதான். ஆனால் ஹெலிகாப்டர் வாங்குவதைப்பற்றி ஒரு போதும் முன்னாள் விமானப்படை தளபதியுடன் விவாதிக்கவில்லை. 

கூடோஹஸ்கியின் பிஸினெஸ் பார்ட்னர் கார்லோ கெரோசாவை பல வருடங்களாகத் எனக்குத் தெரியும். அவர் மூலம்தான் கூடோஹஸ்கியை சந்தித்தேன். எனக்கு சுவிஸ் வங்கி கணக்கோ அல்லது கிரெடிட் கார்டோ கிடையாது. இந்த பண பேர விவகாரத்தில் புகாரில் சிக்கியுள்ள டெல்லி வழக்கறிஞர் கெளதம் கெய்தானுடன் எந்த வியாபாரத் தொடர்பும் இல்லை. ஆனால் அவரை நான் அறிவேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், கூடோ ஹஸ்கி பணத்தை சுருட்டிக் கொள்ள தன்னைப்பற்றி இப்படி கதை கட்டி விடுவதாகவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago