முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் விவகாரம்: கருணாநிதிக்கு சம்மன்

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.26 - விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து அவதூறு வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் மாதம் 29-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப சென்னை செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி ாவிஸ்வரூபம்ா படப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையானது ஜனவரி 31-ந் தேதி வெளியான இந்து நாளிதழ் பத்திரிகையில் செய்தியாக வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் இந்து பத்திரிகை ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், வெளியீட்டாளர் பத்மநாபன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

முதல்வர் சார்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்த அந்த மனுவில் உண்மைக்கு மாறாக பொய்யாக அவதூறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியானது தமிழக அரசுக்கும், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஆராய்ந்த முதன்மை செசன்சு கோர்ட் நீதிபதி பொன்.கலையரசன், இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்து நாளிதழ் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், வெளியீட்டாளர் பத்மநாபன் ஆகியோர் ஏப்ரல் மாதம் 29-ந் தேதி கோர்டில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிட உத்தரவிட்டார்.

இதேபோன்று வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி பத்திரிக்கை ஆசிரியர் செல்வம் ஆகிய இருவரும் மேற்கண்ட அதே நாளில் ஆஜராவதற்கும் சம்மன் அனுப்ப நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago