எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரு நாட்டில் ஓடு பாதையில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் எதிர்பாராதவிதமாக மோதியதில் விமானம் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர்.
பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் இருந்து 102 பயணிகளுடன் உள்ளூர் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்ப வேகமாக சென்றது. அப்போது ஓடு தளத்தில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது. இதனால் விமானத்தை விமானிகள் நிறுத்த முயற்சித்தனர். ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது. விமானத்தில் இருந்து பயணிகள் பீதியில் அலறினர்.
உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் தீயணைப்பு படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறும்போது, உள்நாட்டு விமானம் ஓடு பாதையில் புறப்பட்ட போது தீயணைப்பு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பயணிகள், விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


