எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: reuters
புது டெல்லி ; திகார் சிறையில் ஒரு மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை பிசியோதெரபிஸ்டாக மாற்றியுள்ளனர் என்று சத்யேந்திர ஜெயின் குறித்து ஜே.பி. நட்டா கடுமையாக தாக்கி பேசினார்.
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 4-ம் தேதி டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. டெல்லி மாநகராட்சி பகுதிகளில் இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வஜிர்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
டெல்லி மக்கள் வரவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். ஆம் ஆத்மியின் செயல்பாடுகளால் பொதுமக்கள் அலுத்துப்போய், பா.ஜ.க.வை பாராட்டி வருகின்றனர். ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் ஊழல் வழக்கில் சத்யேந்திர ஜெயின் சிறையில் இருக்கிறார். அவர்கள் திகார் சிறையில் ஒரு மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை பிசியோதெரபிஸ்டாக மாற்றியுள்ளனர் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


