எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.24 - தமிழகத்தில் பிளஸ் 2, 10-வது தேர்வு முடிவுகள் வரும் மே.14, மே.25-ந் தேதிகளில் வெளியாகும் என பள்ளி கல்விதுறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
பிளஸ்2 தேர்வு மார்ச் 2ந்தேதி தொடங்கி 25ந்தேதி முடிவடைந்தது. 7 லட்சத்து 74 ஆயிரத்து 205 மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். மாணவர்கள் 3 லட்சத்து 36 ஆயிரத்து 443 பேர். தனியாக 57 ஆயிரத்து 56 பேர் எழுதினார்கள். மொத்தம் 1,890 மையங்களில் பிளஸ்2 தேர்வு நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11ந்தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஒ.எஸ்.எல்.சி. தேர்வை 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ மாணவிகள் எழுதினார்கள். தனியாக 97 ஆயிரத்து 655 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். பிளஸ்2 விடைத்தாள் திருத்தும்பணி நடந்து முடிந்து விட்டது. மார்க் பட்டியல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வு தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. பிளஸ்2 தேர்வு முடிவு மே மாதம் 14ந்தேதி வெளியாகிறது. எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் மே 25ந்தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று வெளியிட்டார். உலக புத்தக தினம் விழா சென்னை எழும்ர் கன்னி மாரா நூலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான 2 நாட்கள் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா இன்று தொடங்கி வைத்தார். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று கேட்டனர். அதற்கு சபீதா பதில் அளித்து கூறியதாவது: பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 14ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25ந்தேதி வெளியிடப்படும். பிளஸ்2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டன. எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. தேர்வு முடிவுகள் அரசு சார்பில் பள்ளிக்கல்வி இணைய தளத்தில் மட்டும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் மாணவர்கள் முடிவை பார்க்க முயற்சிக்கும்போது, அது முடங்கி விடுகிறது. தேர்வு முடிவை உடனே அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். மாணவர்கள்பெற்றோரின் சிரமத்தை தவிர்க்க கூடுதலாக மேலும் சில இணைய தளங்களில் பிளஸ்2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட பரிசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


