எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், பர்கினோ பாசோவின் வடக்கே உள்ள போலா பகுதியில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கண் இமைக்கும் நேரத்தில் காட்டுமிராண்டித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. விசாரணையில், ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பொதுமக்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


