எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ உலகின் மாமேதை, தந்தை என உலகமெங்கும் பாராட்டப்படும் டாக்டர் ஹிப்பாக்ரேடிஸ், கைரேகை ஜோதிட சாஸ்திரம், சாமுத்திரிகா லட்சணம், மனோதத்துவம் போன்ற காலைகளிலும் பிரபல நிபுணர் ஆவார். தமது வாழ்க்கையில் பெரும் பகுதியை மருத்துவம், ஜோதிடம் போன்ற கலைகளுக்கு அர்ப்பணித்தவராவார்.
நமது பாரததேசத்து மாமுனிகள் தவ வலிமையால் இறைவன் அருளை பரிபூரணமாகப் பெற்றவர்கள். ஜோதிடம், வைத்தியம் போன்ற கலைகளில் மகா ஞானிகள். இறைவன் அருளால் பெற்ற கலைகளை மக்கள் நலன் கருதி ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்ததுடன் பலருக்கும் கற்று கொடுத்தார்கள்.
மாமுனிகளிடம் அபூர்வ கலைகளை கற்ற நம் மூதாதையர்கள் ஒருவரின் கையைப் பிடித்து கை நாடியின் துடிப்பின் தன்மைகளை அறிந்து பூமியில் விளையக் கூடிய மூலிகைகளை பயன்படுத்தி பக்க விளைவுகள் எதுவும் இல்லாதவாறு நோய்களை பரிபூரணமாக குணப்படுத்தி வெற்றி கண்டார்கள். கர்ப்பிணிப் பெண்களின் கை நாடி துடிப்பினை நிர்ணயித்து வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை மிகத்துல்லியமாக கூறும் பேராற்றல் பெற்றவர்களாகவும் விளங்கினார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
தற்போது மருத்துவமும், விஞ்ஞானமும் வானளாவ வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் தம் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என ஆர்வத்தின் மிகுதியால் ஸ்கேனிங் முறையை பயன்படுத்தி தெரிந்து கொள்கிறார்கள். பிறக்கப் போவது ஆண் குழந்தை என்றால் எல்லையில்லா மகிழ்ச்சியடைகிறார்கள். பெண் குழந்தை என்றால் அளவற்ற சோகம் கொள்கிறனர். விரக்தியடைகின்றனர். இதற்கு சரியான காரணம் என்னவென்றால் பெண் குழந்தைகளின் திருமண காலத்தில் தங்க ஆபரணங்களின் விலைகளை கற்பனை செய்து பார்ப்பதுதான்.
பொதுவாக பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? பிள்ளைக் கனியமுது ஒன்று பிறந்திட வேண்டும். அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேண்டும். குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று. "குழந்தைகளின்'' சிங்காரப் புன்னகை கண்ணார கண்டாலே சங்கீதம், வீணையும் ஏதுக்கம்மா. பொதுவாக பெண் குழந்தைகளை கல்வியில் மேதைகளாக்கி விட்டால் நிச்சயம் பெற்றோர்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எவ்வித பிரச்சனையும், கவலையும் வாழ்க்கையில் இராது.
பொதுவாக எக்ஸ்ரே, ஸ்கேனிங் முறையை பயன்படுத்துவதால் கண்ணுக்குத் தெரியாத நுண்கதிர்கள் மின்னல் வேகத்தில் உடலில் பாய்கின்றன என விஞ்ஞானம் கூறுகிறது. ஸ்கேனிங் முறையை பயன்படுத்துவதால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் பிஞ்சுக் குழந்தையின் மீதும் ஸ்கேனின் நுண்கதிர்கள் பாய்வதால் எதிர்காலத்தில் மழைலை செல்வங்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் அல்லவா? தாய்குலம் சிந்திக்க வேண்டும்.
அக்காலத்தில் எக்ஸ்ரே ஸ்கேனிங் முறைகள் இல்லை. டாக்டர் ஹிப்பாக்ரேடிஸ் தமது அனுபவத்தில் ஆய்வுகள் செய்த தன்மைக்கேற்ப கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை துல்லியமாக சுலபமாக அறிய எல்லா நாட்டு மக்களாலும், சட்டென எளிதில் கண்டு பிடிக்கும் வகையில் மிக எளிமையாக ஓர் அட்டவணையை வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த அட்டவணையின் சிறப்பு என்னவென்றால் ஒரு பெண்ணின் சரியான தற்போதைய வயது, கர்ப்பமடைந்த ஆங்கில மாதம் இவைகளை கூறினால் கர்ப்பிணிப் பெண்ணை பாராமல், கை நாடி பார்க்காமல், ஸ்கேன் எடுக்காமல், எந்தவித பணமும் செலவு இல்லாமல் குழந்தையின் பாலினத்தை உத்திரவாதமாக கூறலாம்.
டாக்டர் ஹிப்பாக்ரேடிஸின் அட்டவணைப் பிரகாரம் பெண்களின் வயது 18 முதல் 41 வயது வரை மட்டுமே குழந்தையின் பாலினத்தை அறிய முடியும். இக்கால அளவிற்குள் தான் குழந்தைகளை பெற்றுக் கொள்வது பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் சிறந்த பலனாகும் என்பது இவரது மேலான கருத்தாகும்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும், ஒவ்வொரு ஊர்களிலும் டாக்டர்கள், விஞ்ஞானிகள், ஜோதிடர்கள், பொதுமக்கள் போன்றோர் இந்த அட்டவணை மூலம் குழந்தையின் பாலினத்தை ஆய்வு செய்து சரிபார்த்த வகையில் 99 சதவிகிதம் உத்திரவாதம் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டவணையில் குழந்தையின் பாலினம் அறிய:
- கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய சரியான வயதை கணித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கர்ப்பமடைந்த ஆங்கில மாதத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
- அட்டவணையில் மேல் பகுதியில் பெண்களின் வயது 18 முதல் 41 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
- அட்டவணையின் இடது புறத்தில் ஆங்கில மாதங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
- அட்டவணையில் காணப்படும் கட்டங்களுக்குள் M என குறிப்பிடப்பட்டுள்ளவைகள் MALE ஆண் குழந்தைகளையும் F என குறிப்பிடப்பட்டுள்ளவைகள் FEMALE பெண் குழந்தைகளையும் குறிப்பிடுவதாகும்.
உதாரணமாக 21 வயதுப் பெண் ஒருவர் மார்ச் மாதம் கர்ப்பம் அடைந்தார் என்றால் மார்ச் மாதத்திற்குரிய மேலே காணப்படும் 21 வயதிற்குரிய கட்டத்திற்கும், மார்ச் மாதத்திற்குரிய கட்டத்தையும், ஒப்பிட்டுப் பார்த்தால் கட்டத்திற்குள் F என குறிப்பிடப்பட்டுள்ளதால் அப்பெண்ணிற்கு பிறக்கப்போவது பெண் குழந்தையாகும்.
வயதின் உளவியல் தத்துவம்:
பொதுவாக 7 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தையின் மனநிலையானது விளையாடுவதில் மிக்க ஆர்வம் இருக்கும். எதிலும் ஆர்வம் அல்லது வெறுப்பு இருந்து வரும். பெற்றோர்களுக்கு குழந்தை பிறந்த ஆண்டே வாழ்க்கையில் ஓர் திருப்புமுனை போல் ஏற்படும். அந்த ஆண்டு மாற்றம் ஏற்படவில்லையெனில் 7ம் ஆண்டு கட்டாயம் மாற்றம் ஏற்படும். வாழ்க்கையில் 7,9,11 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜாதகரின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பது உளவியல் ஜோதிட தத்துவமாகும்.
வயது 14 முதல் 21 வயது வரை உள்ள காலம் வாழ்க்கைக்கு ஒரு முக்கிய பாதையை காட்டுவதாக அமையும். இவை ஜாதகரின் தொழில் துறைக்கு ஏற்புடையதாகவும் இருக்கும். மனதில் புரியாத நிலையும், நம்பிக்கையும் கலந்தே இருக்கும். தான் செய்யும் காரியங்கள் நல்லதோ, கெட்டதோ அதன் பின் விளைவுகளை அறிய இயலாது. விளையாட்டுத் தனம் நிரம்பி இருக்கும் பொழுது போக்கும் அம்சங்களில் மனம் ஆர்வம் கொள்ளும். மனம் குறிக்கோளின்றி இருக்கும். செக்ஸ் உணர்வுகள் மிகுதியாகும். இந்த வயதுக் காலங்களில் மனதை மிக பகுக்குவமுடன் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் ஊரறிந்த அவமானங்கள் ஏற்பட்டு தற்கொலை முயற்சி, அரச தண்டனை போன்றவைகளை சந்திக்க நேரிடும்.
வயது 21 முதல் 28_க்குள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனம் குறுக்கு வழியில், தவறான பாதையில் செல்ல நேரிடும். நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும். வாலிப முறுக்கில் உள்ள காலம் என்பதால் கோபம், உற்சாகம் நிலையற்றதாகும். மனம் ஒரு குரங்கு எனலாம். மனம் ஒரு நிலையில் இராது. உணர்ச்சிகளுக்கு அடிமையாக நேரிடும். தான் எல்லா வகையிலும் அனுபவசாலி, திறமைசாலி என குருட்டு நம்பிக்கையும், மமதையும் ஏற்படும். உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக நேரிட்டால் எளிதில் மீள முடியாது. எனவே இந்த வயதுக் காலங்களில் மனப்பக்குவம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எதிர்கால வாழ்க்கையில் ஏற்படப்போகும். பின் விளைவுகளை நன்கு சிந்திக்க வேண்டும். இல்லையேல் அவமானம், குலப்பெருமை கெடும்.
வயது 28 முதல் 35_க்குள்ளான காலம் எதிர்காலத்தை வளமையாக்கி கொள்ள மனதில் நிறைய திட்டங்கள் உருவாகும். சரீர சுகத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து மனம் செயல்படும். அறிவு வளர்ச்சியும், அனுபவமும் அதிகரிக்கும் காலமாகும். தொழில் துறை சம்பந்தமாக பல விசித்திரமான நண்பர்களும், அனுபவங்களும் ஏற்படும். எதிலும் பொறுமை, நிதானம் மிக அவசியம். பின் விளைவுகள், முன்னேற்றம் போன்றவைகளை நிர்ணயித்து தொழில் துறையை தீர்மானிக்க வேண்டும். வயது 28 முதல் 33 வரை தொழில்துறை கற்பனை செய்தது போல் இராது. மனம் குழப்பமுறும். அதனால் வயது 33_க்கு மேல் ( ஆண்கள் ) விவாகம் செய்வது ஓர் வகையில் நன்மையாகும் இருக்கும்.
வயது 35 முதல் 42 வரையான காலத்தை மத்திய காலம் எனலாம். இக்காலங்களில் தொழில் முன்னேற்றம், இரு வகை வருமான முயற்சி, பூமி, மனை, செல்வம், செல்வாக்கு, ஆடம்பர வாழ்க்கை, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை திட்டமிடல் போன்றவைகளில் மனம் மிக ஆர்வத்துடன் செயல்படும். இந்த வயதுக் காலங்களில் குறிக்கோளுடன் செயல்பட்டால் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாகும்.
ஒருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு இன்பத்திற்கும், துன்பத்திற்கும் வாழ்க்கையின் ஏற்றம், இறக்கத்திற்கும் இந்த வயது காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் இக்காலத்தை பொற்காலமாக மாற்ற திட்டங்கள் போட வேண்டும்.
வயது 45 முதல் 49 வயது காலமானது பழுத்த பக்குவமான காலமாகும். இந்த வயது காலங்களில் தான் ஒருவர் முன்பு செய்த நன்மை தீமைகளை அனுபவிக்க தொடங்குகிறார். சதந்திரமான வாழ்க்கைக்கும். வளர்ச்சிக்கும் காரணங்களை அறியக்கூடிய காலமாகும். வைத்திய செலவுகள் ஆரம்பம் ஆகும் காலமும் எனலாம். தன்னம்பிக்கை மிக அவசியம்.
வயது 49 முதல் 56 வரை உள்ள காலம் சற்று சிக்கலானது எனலாம். சுப செலவுகளும், வைத்திய செலவுகளும், வாழ்க்கையில் இரண்டர கலக்கும் காலம் ஆகும். எதிர்காலத்தைப் பற்றியும் குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம், திருமண வாழ்க்கை, ஆரோக்கியம், சேமிப்பு கடன் போன்றவைகளை நிர்ணயித்து எதை முன் செய்தால் சிறப்பு, எதை பின் செய்தால் நல்லது என ஒவ்வொரு காரியங்களையும் திட்டம் போட்டு செயல்பட வேண்டும. இல்லையேல் கடன் சுமை பெருகும் (அ) சொத்திற்கு சமமாக கடன் ஏற்பட்டு மனம் குழப்பமுறும் ( அ) வேலை செய்யுமிடத்தில் வி.ஆர்.எஸ். (VRS.)பெறும் சூழ்நிலை ஏற்படும். கடன் பிரச்சனை தீருமா? பூமி, மனைகளை இழக்க நேருமா? தொழிலை இழக்க நேரிடுமா? என பல குழப்பங்கள் ஏற்படும். பொதுவாக இக்காலம் பொருளாதார சரிவு மற்றும் இழப்புகளுக்குரிய காலமாக இருக்கும்.
வயது 56 முதல் 63 வரை உள்ள இக்காலங்கள் தொடர்ச்சியாக பிரச்சனைகள், வருத்தங்கள் அளிக்கும். தள்ளாத வயதில் அடியெடுத்து வைக்கும் காலம் ஆகும். நோயின் உபத்திரவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக ஏற்பட்டு கவலை ஏற்படும். கண் நோய், ஆபரேசன் போன்றவைகளினால் மனம் குழப்பமுறும். வாழ்க்கைத் துணையை இழக்க / பிரிய நேரிடலாம். குழந்தைகள் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களுக்கு செல்ல நேரிடலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் தம்மை புறக்கணிக்கிறார்கள் என மனம் வருந்தும். உணர்ச்சிவசப்படுதலும் கோபமும் அதிகரிக்கும். பொறுமை மிக அவசியமான காலமாகும்.
பாலபருவத்தில் நடைபெற்ற சம்பவங்கள் நினைவிற்கு அடிக்கடி வரும். அதே போல் வாலிப பருவம், கல்வி கற்ற பருவம், தொழில் துறையில் நண்பர்களாக பழகியவர்களின் நினைவுகள் அதிகம் வரும். அதே போல் இளமையில் தன்னை அவமானப்படுத்தியவர்கள், நம்பிக்கை மோசம் செய்தவர்களின் நினைவுகள் மனதில் தோன்றும். மேலும் அவர்களை மனதிற்குள் திட்டி தீர்க்க நேரிடும். சாபங்கள் கொடுத்து மனம் ஆறுதலடையும். அக்கம் பக்கத்தில் பழகுபவர்களிடம் தமது பழம்பெருமைகளை பேசி மனம் சந்தோஷமடைவர்.
வயது 63 முதல் 70 வரையான காலங்கள் எதிர்காலம் பற்றி குழப்பங்கள், கவலைகள் மிகுதியாகும். இழந்த சொத்துக்களை எண்ணி மனம் மிகவும் வருத்தும். உடல் நலக்குறைவு, வைத்திய செலவுகள் பற்றி அதிகமாக மனம் குழப்பமுறும். மனவேதனைகள் தொல்லைகள் நிரம்பி இனம் புரியாத குழப்பத்தினால் மனதிற்குள் தனக்குத்தானே பேசியும் சமாதானப்படுத்திக் கொள்ளவும் நேரிடும்.
எதிர்கால திட்டங்கள் சில நிறைவேறாததைக் கண்டு மனம் வருந்தும். எவ்விதமான வழியும் இல்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் இழக்க வேண்டிய கட்டாயத்தினால் இழந்த பணம், பொருள், பூமி, மனை போன்றவைகளை எண்ணி மனம் பெரிதும் வருந்தும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை இழக்க நேரிடலாம். காலத்தின் கட்டாயம் என மனதை தேற்றிக் கொண்டு கோபத்தை அடக்கி பொறுமையுடன் மனதை தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுத்தி வாழ்வது விவேகமாகும்.
வயது 70 முதல் 77 வரை உள்ள காலம் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியும், குழப்பமும் ஏற்படும் காலம் ஆகும். குடும்பத்தில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். கடுகளவு பிரச்சனை மலையளவாக தென்படும். தொடர்ந்த வைத்திய செலவுகளினால் மனம் நிம்மதி சிறிதும் இராது. மரண பயம் மிகுதியாகும். உடலும், உள்ளமும், சோர்வடையும். வாழ்க்கைத் துணையை இழக்க நேரிடலாம் / இழந்திருக்கலாம். மனம் எப்போதும் குழப்பத்தில் இருப்பதால் தனக்குத்தானே பேசும் நிலை ஏற்படும். தெய்வீக வழிபாடு மிக அவசியம்.
வயது 77 முதல் 84 வரை மனதில் எப்போதும் மரண பயம் குடிகொண்டிருக்கும். மற்றவர்கள் மீது நம்பிக்கை இருக்காது. இக்காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்கள் ஜாதகரை பெரும் சுமையாக கருதுவர். ஏனென்றால் இவரை பராமரிப்பது குடும்பத்தினர்களுக்கு பொறுமை இல்லாமல் போய்விடும். ஜாதகர் கடந்த கால வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை எண்ணி வருந்தக்கூடிய காலமாகும்.
பொதுவாக வயது 84 முதல் 91 வரையிலும் அதற்கு மேலும் இருந்தால் அதை குழந்தை பருவமாகவே நினைக்க வேண்டும். தான் நினைப்பதை குடும்பத்தினர்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாகும். சொன்னதையே திரும்ப, திரும்ப சொல்ல நேரிடும். சில விஷயங்களில் பிடிவாத குணம் நிரம்பி இருக்கும். சிறு குழந்தைகளைப் போல் தின்பண்டங்களில் ஆர்வம் மிகுதியாகும். வாழ்க்கைத் துணையை இழந்திருக்கலாம். அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். சிறு குழந்தையைப் போல் அழுவார்கள். எனவே இந்த வயதுகாரர்களை ஐந்து வயது குழந்தையாக நினைத்து மிக அன்புடன் நடத்த வேண்டும். இவர்களிடம் கோபம் கொள்வது, அடிப்பது மகா பாபமாகும்.
முதியோர்கள், பேரன், பேத்திகளிடம் வானத்தைப்போல அன்பு, பாசம் உள்ளவர்கள்:
பொதுவாக ஒருவருக்கு பேரன், பேத்தி பிறந்து விட்டால் அவர்களுக்கு அளவற்ற செல்லம் கொடுப்பார்கள். சலுகைகளை, பாசத்தை வாரிவழங்குவார்கள். தமது பிள்ளைகளை ஒவ்வொரு விஷயத்திலும் ராணுவ கட்டுப்பாடு, கண்டிப்புடன் வளர்ப்பார்கள். ஆனால் பேரன், பேத்திகளிடம் கண்டிப்பு விஷயங்களில் முற்றிலும் தள்ளுபடி செய்து செல்லம் கொடுப்பார்கள். பேரன் _பேத்தி செய்யும் சேஷ்டைகளையும் பேசுவதையும் கண்டு மகிழ்வார்கள்.
வீட்டில் உள்ள பொருட்களை உடைத்தாலும், காகிதங்களை கிழித்துப் போட்டாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். சுதந்திரம் மிகுதியாக கொடுப்பார்கள். பேரன், பேத்திகளுக்கு தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருள்கள் எல்லாம் தமது சேமிப்பு பணத்திலிருந்து வாங்கி கொடுத்து மகிழச் செய்வார்கள். பேரன், பேத்தி கண்ணீர் விட்டால் மனம் சகிக்காது. அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நியாயம் என வாதிடுவார்கள். நாடு, மதம், மொழி என பாகுபாடின்றி தாத்தா, பாட்டி போன்றோர்க்கு இது ஒரு விசித்திர குணமாகும்.
(பி.கு:_ இக்கட்டுரையாளர் மனவியல் ரீதியாக பொதுவான `வயது_வாழ்க்கை' இரண்டை கணக்கில் கொண்டு எழுதியுள்ளார். இறை சிந்தனை, பொதுத் தொண்டு, சத்சங்கத்தில் இருத்தல் போன்றவற்றால்... எத்தனை வயதானாலும் மனிதனுக்கு ஒவ்வொரு நாளும் பொன்னாளே. சாதனையாளர்களுக்கு வயது என்பது ஒரு எண்ணிக்கையே!) _பொ.ஆ.)
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
தங்கம் விலை உயர்வு
05 May 2025சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2025
05 May 2025 -
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்
05 May 2025சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு, சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள்.
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: விஜய் நேரில் அஞ்சலி
05 May 2025சென்னை: கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சிவகிரி வயதான தம்பதி படுகொலை: சி.சி.டி.வி காட்சிகளை திரட்ட காவல்நிலையங்களுக்கு உத்தரவு
05 May 2025ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வில் சர்ச்சை கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்
05 May 2025சென்னை: நீட் தேர்வில் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
05 May 2025சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.
-
ரெட்ரோ விமர்சனம்
05 May 2025வெளிநாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செயல்களை செய்யும் ஜோஜு ஜார்ஜால் வளர்க்கப்படும் தாய், தந்தை இல்லாத சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதி
-
மயிலாடுதுறையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: மின் விளக்கு கம்பம் சாய்ந்ததில்காயமின்றி உயிர் தப்பிய ஆ.ராசா
05 May 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் மேடையில் சாய்ந்தது.
-
வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிவு
05 May 2025ஓசூர், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக்கிழங்கு விலை சரியதொடங்கியுள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் கில் .?
05 May 2025புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப் பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நூலுரிமை தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 May 2025சென்னை, கவிக்கோ அப்துல்ரகுமான் உள்பட 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையை எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு சென்ன
-
பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு
05 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கே
-
வடபழனியில் நகை வியாபாரியிடம் ரூ.20 கோடி வைரம் திருடப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது
05 May 2025சென்னை, வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு புதின் முழு ஆதரவு
05 May 2025புதுடெல்லி, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
போதிய ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
05 May 2025புது டில்லி, போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் புதிய கல்விக்கொள்கை தேவையில்லை: அமித்ஷா பேச்சுக்கு அன்பில் மகேஷ் பதில்
05 May 2025சென்னை, வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
05 May 2025கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
-
'லெவன்' இசை வெளியீடு
05 May 2025ஏ.ஆர்.
-
சீனா: படகு கவிழ்ந்து 10 பேர் பலி
05 May 2025பெய்ஜிங்: சீனாவில் தற்போது மே தின விடுமுறை காலம் என்பதால் நேற்றுமுன்தினம் யாங்சே நதியின் கிளைநதியான வூ நதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர்.
-
இந்திய அணி ஆறுதல் வெற்றி
05 May 2025இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
-
டி-20, ஒருநாள் தரவரிசை: இந்திய அணி ஆதிக்கம்
05 May 2025மும்பை: டி20, ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா ஆதிக்கம்...
-
பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப்
05 May 2025லக்னோ: ஐ.பி.எல். போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.
-
சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு, விவரங்களை அறிவிக்க மத்திய அரசுக்கு காங்., வலியுறுத்தல்
05 May 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பில் காலக்கெடு விவரங்களை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
-
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீதம் வரி: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
05 May 2025வாஷிங்டன், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.