எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
காளான் குருமா
Cooking time in minutes:
20
Ingredients:
காளான் குருமா செய்யத் தேவையான பொருள்கள்;
- காளான் - 1/4 கிலோ.
- முந்திரி பருப்பு - 50 கிராம்.
- எண்ணெய் - 5 டீஸ்பூன்.
- தேங்காய் - 1/2 மூடி.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1.
- பொடியாக நறுக்கிய தக்காளி – 1.
- 5 பச்சை மிளகாய் - 5.
- சின்ன வெங்காயம் - 10.
- நெய் - 1 டீஸ்பூன்.
- மல்லி - 1 டேபிள் ஸ்பூன்.
- பட்டை - 6 கிராம்.
- கிராம்பு - 6.
- சோம்பு -1 1/2 டீஸ்பூன்.
- சீரகம்- 1 1/2 டீஸ்பூன்.
- கசாகசா - 1 டீஸ்பூன்.
- லவங்கம் – 1.
- ஏலக்காய் – 1.
- பிரியாணி இலை – 1.
- பூண்டு - 10.
- இஞ்சி - சிறிதளவு.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- 1/2 மூடி தேங்காய்யை துருவி தேங்காய் துருவலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும். .
- அடுப்பில் கடாய் வைத்து,கடாய் சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லியை போட்டு வறுக்கவும்.
- இதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி 5 கிராம் பட்டை, 4 கிராம்பு, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் கசாகசா போட்டு வறுக்கவும்.
- இதனுடன் 5 பச்சை மிளகாய், 10 சின்ன வெங்காயம்,10 பல் பூண்டு,சிறிதளவு இஞ்சி, 50 கிராம் முந்திரி பருப்பு மற்றும் 1/2 மூடி தேங்காய் துருவலை போட்டு நன்றாக கலந்து விடவும்.
- வறுத்த மசாலா பொருட்களை சிறிது நேரம் ஆற விட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 4 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்,
- எண்ணெய் சூடானவுடன் 2 பட்டை, 2 கிராம்பு, ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய், 1/2 டீஸ்பூன் சோம்பு, 1/2 டீஸ்பூன் சீரகம், ஒரு பிரியாணி இலை போட்டு வறுக்கவும்.பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி,1/4 கிலோ சுத்தம் செய்த காளான்,ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விடவும்.
- இதனுடன் மிக்சியில் அரைத்த மசாலா விழுதுகளை போட்டு கிளறி விடவும்.
- இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விட்டு 3 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
- சுவையான காளான் குருமா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


