எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரம் ஓதி நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழ் கடவுளான பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் பல்வேறு கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழனி முருகன் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி விஷ்ணுகுமார் மற்றும் நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. மேலும், இது தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்தது.
இந்நிலையில், நீதிபதிகள் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும். மேலும், அதன் நிலை அறிக்கையை குடமுழுக்கு முடிந்த பிறகு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


