எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, மார்ச். 21 - இந்தியாவுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஆண்டுதோறும் நடைபெறும் இரு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை இம்முறை நடைபெறாது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் இந்த வாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ள நிலையில் இது தொடர்பாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பை மனதில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு தொடர்ந்து அளிக்கப்படும் பயிற்சி காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் சில பயிற்சி மையங்களை இந்திய அரசு வேறு மாநிலங்களுக்கு மாற்றியது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. இப்போது இலங்கைக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் வலுவான தீர்மானத்தை கொண்டு வருமாறு அமெரிக்காவை நிர்ப்பந்திக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படவில்லை என்று இலங்கை தெளிவுபடுத்தி உள்ளது. இது தொடர்பாக கொழும்பில் பெயர் வெளியிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இந்தியா, இலங்கை இடையில் இந்த பேச்சுவார்த்தை இம்மாதம் 23, 25 ம் தேதி வரை கொழும்பில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடர் இப்போது நடைபெறுவதால் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அங்கு கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. எனவே பேச்சுவார்த்தையை ஏப்ரல் மாத மத்தியில் நடத்துவதற்கான தேதிகளை இந்தியா அளித்தது. எனினும் அப்போது தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு விடுமுறை காரணமாக அதை ஏற்க இலங்கையால் இயலவில்லை. எனவே இரு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை ஏப்ரல் இறுதியிலோ, மே மாத தொடக்கத்திலோ நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


