எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இந்த ஆண்டு குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்று 26-ம் தேதி முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது.
எனவே, பாதுகாப்பு காரணங்களால் இன்று 26-ம் தேதி முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


